தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை மரணம்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை மரணம்

 எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட அரசு பள்ளி ஆசிரியை மரணம்


ADDED : ஜூலை 25, 2026 12:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 12:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு குருபரஹள்ளியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றியவர் சமந்தா குமாரி, 44. எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சமந்தா குமாரிக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது.

அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

எஸ்.ஐ.ஆர்., பணிகளை விரைவில் முடிக்க கோரி சமந்தா குமாரிக்கு, உயரதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். மனஅழுத்தம் காரணமாக இந்த பணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கேட்டிருந்தார். அதற்குள் மாரடைப்பால் ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டார்.

உயரதிகாரிகள் கொடுத்த அழுத்தமே, மரணத்திற்கு காரணம் என்று குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us