/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் மாநகராட்சி தேர்தல் மீண்டும் தள்ளி போகும் அபாயம்
/
'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் மாநகராட்சி தேர்தல் மீண்டும் தள்ளி போகும் அபாயம்
'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் மாநகராட்சி தேர்தல் மீண்டும் தள்ளி போகும் அபாயம்
'கிரேட்டர் பெங்களூரு' மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் மாநகராட்சி தேர்தல் மீண்டும் தள்ளி போகும் அபாயம்
ADDED : ஏப் 25, 2025 05:45 AM
பெங்களூரு: 'கிரேட்டர் பெங்களூரு' நிர்வாக மசோதா விஷயத்தில், கவர்னர் மற்றும் அரசுக்கு இடையே ஏற்பட்டிருந்த பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது. இம்மசோதாவுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட், நேற்று ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டார்.
பெங்களூரு மாநகராட்சியை, ஏழாக பிரிக்கவும், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அமைக்க வாய்ப்பளிக்கும் நோக்கிலும், கர்நாடக அரசு 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா' வகுத்தது. பெலகாவியில் நடந்த சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில், சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புக்கு இடையிலும், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேறியது. கவர்னரின் ஒப்புதலுக்காக ராஜ்பவனுக்கு மசோதாவை அரசு அனுப்பியது.
இதில் கையெழுத்திடாத கவர்னர், சில விளக்கங்கள் கேட்டு அரசுக்கு திருப்பினார். கவர்னர் கேட்டபடி, விளக்கம் அளித்து அரசும் மீண்டும் அனுப்பியது.
அப்போதும் கவர்னர் கையெழுத்திடவில்லை. இதனால் அரசுக்கும், கவர்னருக்கும் பனிப்போர் நிலவியது. ஒவ்வொரு மசோதாவையும், இப்படி திருப்பி அனுப்புவது சரியல்ல என, அரசு அதிருப்தி தெரிவித்தது.
இந்நிலையில் 'கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதா'வுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று கையெழுத்திட்டார். இதன் மூலம் அரசுக்கும், கவர்னர் இடையிலான பனிப்போர் முடிவுக்கு வந்துள்ளது.
கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவுக்கு, கவர்னர் கிரீன் சிக்னல் காட்டியதால், பெங்களூரு மாநகராட்சிக்கு இன்னும் ஓராண்டு தேர்தல் நடப்பது சந்தேகம் என, கூறப்படுகிறது.
ஐந்து ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அதிகாரிகளே மாநகராட்சியை நிர்வகிக்கின்றனர்.
உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், பெங்களூரு மாநகராட்சிக்கு தேர்தல் நடத்த, அரசுக்கு மனம் இல்லை. தேர்தலை தள்ளி வைக்கும் நோக்கில், கிரேட்டர் பெங்களூரு நிர்வாக மசோதாவை வகுத்திருந்தது.
தற்போது அதற்கு கவர்னரின் ஒப்புதல் கிடைத்ததால், தேர்தல் மேலும் தள்ளி போகும் வாய்ப்புள்ளது.
சென்னப்பட்டணா தொகுதிக்கு, இடைத்தேர்தல் நடந்த போது, ராம்நகருக்கு பெங்களூரு தெற்கு மாவட்டம் என, பெயர் சூட்டுவதாக, துணை முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
பெங்களூரு மாநகராட்சி பிரிக்கப்பட்ட பின், ராம்நகர், கனகபுரா தாலுகாக்கள், பெங்களூரு தெற்கு மாநகராட்சி எல்லைக்குள் வரும். இதன் மூலம் சிவகுமார், தன் வாக்குறுதியை நிறைவேற்றி கொள்வார்.