sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கிராம பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர் 

/

 கிராம பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர் 

 கிராம பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர் 

 கிராம பஞ்சாயத்துகளுக்கு மகாத்மா காந்தி பெயர் 


ADDED : மார் 07, 2026 06:17 AM

Google News

ADDED : மார் 07, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் l ஐந்தாவது மாநில நிதி ஆணையம், 2026 --- 2030 காலகட்டத்திற்கான அறிக்கையை கொடுத்து உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநில அரசின் வருவாய் பகிர்ந்தளிப்பு, 48 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதில், 35 சதவீதம் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கும், 15 சதவீதம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒதுக்கப்படும்

l ஜல்ஜீவன் மிஷன் திட்டத்திற்காக, 2026 -- 2027ம் நிதியாண்டில், கர்நாடக அரசு 10,433 கோடி ரூபாய் ஒதுக்கும். இந்த திட்டத்திற்கான பங்கை மத்திய அரசு கொடுக்காவிட்டாலும், மாநில அரசு தன் பணத்தை பயன்படுத்துகிறது

l 'நரேகா' திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டில், மாநிலத்தின் ரூரல் பகுதிகளில் வசிக்கும், 71 லட்சம் குடும்பத்தினர் பயன்பெறுவர்

l கல்யாண கர்நாடகா மேம்பாட்டு ஆணையம் சார்பில், கல்யாண பாதை திட்டத்தின் கீழ் 1,125 கி.மீ., துார சாலை பணிகள் 1,000 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை, 238 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு உள்ள நிலையில், மீதம், 762 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்

l பிரகதி பாதை திட்ட பணிகளுக்காக நடப்பு நிதியாண்டில், 500 கோடி ரூபாய் விடுவிக்கப்படும்

l மாநிலத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளின் பெயர்கள், 'மகாத்மா காந்தி கிராம பஞ்சாயத்து' என்று பெயர் மாற்றம் செய்யப்படும்.






      Dinamalar
      Follow us