UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 10:47 PM

தங்கவயல்: தங்கவயலில் இறந்தவர்கள் நினைவாக கல்லறை திருவிழா நேற்று நடந்தது.
தங்கவயலில் சாம்பியன் ரீப், மாரிகுப்பம், ராஜர்ஸ்கேம்ப், கோரமண்டல், பாலக்காடு, ராபர்ட்சன் பேட்டை காந்தி நகர், உரிகம் பேட்டை ஆகிய இடங்களில் மயானம் உள்ளது.
இறந்த தங்கச் சுரங்க வெளிநாட்டு அதிகாரிகள், தங்கவயலை சேர்ந்தோரின் உடல்களை அடக்கம் செய்ய, சுரங்க நிறுவனமே இடத்தை ஒதுக்கி உள்ளது.
குறிப்பாக, சாம்பியன் ரீப் கல்லறை தோட்டத்தில் 150 ஆண்டுகளாக பலரின் நினைவிடங்கள் கல்லறைகளாக காட்சி அளிக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி ‘கல்லறை திருவிழா’ எனும் ஆன்மாக்கள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
நேற்று காலை 6:00 மணி முதலே சாம்பியன் ரீப் மயானத்தில் உள்ள பலரின் கல்லறைகளுக்கு அவரவர் குடும்பத்தினர் வந்து, இறந்தவர்களின் நினைவாக பூ துாவி அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி, அவர்கள் விரும்பும் உணவுப் பொருட்களை படையலிட்டு வழிபட்டனர். அனைத்து மதத்தினரும் இவ்வாறு வழிபட்டனர்.
