ADDED : செப் 30, 2026 03:49 AM
பெங்களூரு: கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும், 2,000 ரூபாயை வங்கிகள் பிடித்தம் செய்யாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி, தலைமை செயலருக்கு, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டு உள்ளார்.
கிரஹலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் பெண்கள் வங்கிகளில் இருந்து ஏற்கனவே வாங்கிய கடன், வட்டியை செலுத்தாத போது, கிரஹலட்சுமி திட்ட பணத்தை வங்கிகள் பிடித்தம் செய் வதாக, முதல்வர் சிவ குமாருக்கு, காங்கிரஸ் எம்.எல்.சி., தினேஷ் கூளி கவுடா கடிதம் எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்த சிவகுமார், கிரஹலட்சுமி திட்ட பணத்தை வங்கிகள் பிடித்தம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படியும், வங்கிகளுக்கு கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கும்படியும், ஏற்கனவே பிடித்தம் செய்த பணத்தையும் திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கவும், தலைமை செயலர் ஷாலினிக்கு உத்தரவிட்டுள்ளார்.
