/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாக்கியை கேட்டதால் மளிகை கடைக்கு தீ
/
பாக்கியை கேட்டதால் மளிகை கடைக்கு தீ
ADDED : ஜூலை 11, 2025 10:57 PM
மங்களூரு: வாங்கிய பொருட்களுக்கான பாக்கி தொகையை தரும்படி கேட்டதால், ஆத்திரத்தில் மளிகைக்கடைக்கு தீவைத்தவர் கைது செய்யப்பட்டார்.
தட்சிண கன்னட மாவட்டம், பெல்தங்கடி தாலுகாவின், குருவாயனகெரே கிராமத்தில் சதகதுல்லா என்பவர், மளிகைக்கடை நடத்துகிறார். இந்த கடையில் உமேஷ் பங்கேரா, வீட்டுக்கு தேவையான பொருட்களை கடனுக்கு வாங்கிச் செல்வது வழக்கம். சரியாக பணம் கொடுப்பதில்லை. 38,000 ரூபாய் வரை பாக்கி வைத்திருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, உமேஷ் பங்கேராவை மொபைல் போனில் தொடர்பு கொண்ட சதகதுல்லா, மளிகை பாக்கியை தரும்படி வலியுறுத்தினார். இதனால் கோபமடைந்த உமேஷ் பங்கேரா, நேற்று முன் தினம் அதிகாலை, கடையின் முன் இருந்த பிளக்ஸ்களில் பெட்ரோல் தீவைத்து விட்டு தப்பினார்.
தீ கடைக்கு பரவியதால், ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீக்கிரையாகின. காலை கடையை திறக்க, சதகதுல்லா வந்தபோது தீப்பிடித்திருப்பது தெரிந்தது. பெல்தங்கடி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், கடையை பார்வையிட்டனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, கடைக்கு தீ வைத்தது உமேஷ் பங்கேரா என்பது தெரிந்தது.
கடை உரிமையாளர் அளித்த புகாரின்படி, உமேஷ் பங்கேராவை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.