/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தங்கவயலில் பிரஸ் பவன் அரங்கம் கட்ட பூமி பூஜை
/
தங்கவயலில் பிரஸ் பவன் அரங்கம் கட்ட பூமி பூஜை
ADDED : செப் 05, 2025 11:05 PM
தங்கவயல்: தங்கவயல் பிரஸ் பவன் அரங்கம் கட்டுவதற்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
தங்கவயல் பத்திரிகையாளர் சங்கத்தின் பிரஸ் பவன், ராபர்ட்சன்பேட்டை பழைய சானிடரி போர்டு கட்டட அலுவலக வளாகத்தில் உள்ளது. இங்கு 50 லட்சம் ரூபாய் மதிப்பில் பிரஸ் பவன் அரங்கம் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்காக தங்கவயல் பத்திரிகையாளர் சங்கத்தினர், தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலாவை அணுகி நிதி வழங்க கோரியிருந்தனர். இதை ஏற்று, தொகுதி மேம்பாட்டு நிதியில் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கினார்.
இதை தொடர்ந்து, பிரஸ் பவன் வளாகத்தில் அரங்கம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது.
கோலார் மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் கோபிநாத், முன்னாள் தலைவர் முனிராஜ், தங்கவயல் சங்கத் தலைவர் துரையரசன், செயலர் மூர்த்தி உட்பட தங்கவயல் பத்திரிகையாளர்கள் பலரும் பங்கேற்றனர்.
இது போன்று, 'கோலார் தொகுதி ம.ஜ.த., - எம்.பி., மல்லேஸ் பாபுவிடமும் நிதி கோருவோம்' என, பத்திரிகையாளர்கள் சிலர் கூறினர்.