தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு'

 'மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு'

 'மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்களுக்கு ஜி.எஸ்.டி.,யில் விலக்கு'


ADDED : மே 27, 2026 06:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 06:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: 'மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,யை விலக்க வேண்டும் என தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள், சாதனங்கள் மீது ஜி.எஸ்.டி., விதிக்கப்படுகிறது. இவை ஆடம்பர பொருட்கள் கிடையாது. அத்தியாவசிய பொருட்களே. இந்த பொருட்களுக்கு வரி விலக்கு செய்ய வேண்டும். இவற்றை வரி அல்லாத பொருட்களின் கீழ் கொண்டு வர வேண்டும்.

இதன் மூலம் லட்சக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பயனடைவர். இந்த வரி விலக்கு, வேலைவாய்ப்பு, கல்வி, அன்றாட வாழ்க்கை மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்துக்கு நிதிச்சுமையை குறைக்கும்.

எனவே, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சாதனங்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.,க்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us