/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.எஸ்.எல்.சி., மறுமதிப்பீட்டில் காவலாளியின் மகன் முதலிடம்
/
எஸ்.எஸ்.எல்.சி., மறுமதிப்பீட்டில் காவலாளியின் மகன் முதலிடம்
எஸ்.எஸ்.எல்.சி., மறுமதிப்பீட்டில் காவலாளியின் மகன் முதலிடம்
எஸ்.எஸ்.எல்.சி., மறுமதிப்பீட்டில் காவலாளியின் மகன் முதலிடம்
ADDED : மே 24, 2025 11:05 PM
ஹாவேரி: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு மதிப்பெண்களை மறுமதிப்பீடு செய்ததில், காவலாளியின் மகன் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
ஹாவேரி, ராணேபென்னுார் தாலுகாவில் உள்ள மொரார்ஜி குடியிருப்பு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் பிரத்வீஷ். இவரது தந்தை கோவிந்தா, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிகிறார்.
மாணவர் பிரத்வீஷ், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வில் 625க்கு 622 மதிப்பெண்கள் பெற்றார். அறிவியல் பாடத்தை தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண் பெற்றிருந்தார். இவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மறுமதிப்பீடு செய்தவர்களுக்கான முடிவுகள் வெளியானது.
இதில், மாணவர் பிரத்வீஷ், 625க்கு 625 மதிப்பெண் பெற்று சாதனை புரிந்தார். இதை அவரது குடும்பத்தினர், அக்கம் பக்கத்தினர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகம் என அனைவரும் கொண்டாடினர். அதுமட்டுமின்றி, காவலாளியின் மகன், மாநிலத்தில் முழு மதிப்பெண் பெற்றது அப்பகுதியினரை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.
இதுகுறித்து, மாணவர் கூறுகையில், ''ஒரு நாளைக்கு 12 மணி நேரம் படிப்பேன். ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஆவதே என் லட்சியம். நானும், என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம்,'' என்றார்.
இவரை போலவே, மாநிலத்தில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் மறுமதிப்பீடு செய்த மாணவர்களில் சிலர் முழு மதிப்பெண் பெற்று அசத்தி உள்ளனர்.
பெங்களூரு, அரவிந்த் பள்ளி மாணவி ரச்சனா நாயக்; சிக்கபல்லாபூர் அகலகுர்கி கிராமம் பி.ஜி.எஸ்., கிராமப்புற ஆங்கில பள்ளி மாணவி எஸ்.பூர்வி; உடுப்பி, குந்தாபூர் ஹெச்.எம்.எம்., மற்றும் வி.கே.ஆர்., பள்ளி மாணவி சாய் ஸ்பர்ஷா; மைசூரு, ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாசாலா பள்ளி மாணவர் எம்.என்.தன்மை; உடுப்பி கோட்டா விவேகா கல்வி நிறுவன மாணவி நிதி நாராயண் பை மனூர் ஆகியோர் முழு மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்கியவர்கள் பட்டியலில் சேர்ந்துள்ளனர்.