பெங்., டிவைன் லைப் சொசைட்டியில் நாளை குரு பூர்ணிமா கொண்டாட்டம்
பெங்., டிவைன் லைப் சொசைட்டியில் நாளை குரு பூர்ணிமா கொண்டாட்டம்
ADDED : ஜூலை 28, 2026 02:00 AM
சிவாஜிநகர்: பெங்களூரு டிவைன் லைப் சொசைட்டியில் நாளை, 'குரு பூர்ணிமா' கொண்டாடப்படுகிறது.
பெங்களூரு சிவாஜிநகர் சுவாமி சிவானந்தபுரத்தில், பெங்களூரு டிவைன் லைப் சொசைட்டி உள் ளது. இங்கு நாளை குரு பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. மாலையில் பஜனை மற்றும் படுக பூஜை; தேசிய வேத அறிவியல் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் ஸ்ரீகந்த ஆச்சார்யா, சொற்பொழிவு; இரவில் மஹா மங்களாரத்தி, பிரசாத வி நியோகம் நடக்கிறது.
ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை, மூன்று நாட்கள் குருதேவ் சுவாமி சிவானந்தஜி மஹாராஜாவின் 63வது புண்யதிதி ஆராதனை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
வரும் 5ம் தேதி மாலையில், பெங்களூரு பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி ஆராய்ச்சி மையத்தின் சார்பில், 'க்ரோத ஹரண' என்ற பெயரில் நாடகம்; இரவில் மஹா மங்களாரத்தி, பிரசாத விநியோகம். 6ம் தேதி மாலையில் கர்நாடக திருப்புகழ் அன்பர்கள் சார்பில் திருப்புகழ் பாடப்படுகிறது.
வரும் 7ம் தேதி காலையில் நாகர சங்கீர்த்தனம்; பஜனை மற்றும் படுக பூஜை; காலை 11:00 மணிக்கு ஸ்ரீ பெல்லி மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ பரம பூஜ்ய ஸ்ரீவனுபவ சரமூர்த்தி சிவருத்ர மஹாசுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார்.
இதன் பின், பஜனைகள், அர்ச்சனை மற்றும் மஹா மங்களாரத்தி; பக்தர்களுக்கு பிரசாத விநியோகம்; மாலையில் பஜனைகள்; இரவு 7:00 மணிக்கு குருதேவ் சுவாமி சிவானந்தாவின் ஆடியோ விஷுவல்ஸ்; அதன் பின், மஹா மங்களாரத்தி மற்றும் பிரசாத விநியோகம் நடக்கிறது.
தொடர்புக்கு: 080 -- 4123 5764.
