தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹம்பி சிறப்பாக பராமரிப்பு 'யுனெஸ்கோ' பாராட்டு

ஹம்பி சிறப்பாக பராமரிப்பு 'யுனெஸ்கோ' பாராட்டு

ஹம்பி சிறப்பாக பராமரிப்பு 'யுனெஸ்கோ' பாராட்டு


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: உலக பாரம்பரிய நினைவு சின்னமான ஹம்பி, சிறப்பாக பராமரிக்கப்படுவதாக 'யுனெஸ்கோ' நிபு ணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விஜயநகரா மாவட்டத்தில் உள்ள ஹம்பி ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னம் என்பதால், அதன் பழமையும் அழகும் மாறாமல் பாதுகாக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, 'யுனெஸ்கோ' எனும், ஐக்கிய நாடுகள் கல்வி, கலாசார அமைப்பிலிருந்து கென்யாவை சேர்ந்த பேராசிரியர் ஜார்ஜ் அபுங்கு, ஜப்பானை சேர்ந்த பேராசிரியர் இச்சிடா ஷிமோடா ஆகியோர் ஹம்பிக்கு வந்திருந்தனர்.

இவர்கள் தங்கள் ஆய்வுகளை முடித்துவிட்டு, பெங்களூரு விதான் சவுதாவில் சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் நேற்று கலந்துரையாடினர்.

அப்போது, ஹம்பி சிறப்பாக பராமரிக்கப்படுவதாக யுனெஸ்கோ நிபுணர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து, சுற்றுலாத்துறை செயலர் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:

வருங்காலத்தில் ஹம்பியில் புதிய திட்டம் கொண்டு வரும் முன், அதனால் அங்குள்ள வரலாற்றுச் சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்படுமா என முறையாக ஆய்வு செய்யப்படும். இதன் பிறகே திட்டத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us