தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடக்கவில்லை: அமைச்சர் திட்டவட்டம்

குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடக்கவில்லை: அமைச்சர் திட்டவட்டம்

குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடக்கவில்லை: அமைச்சர் திட்டவட்டம்


UPDATED : அக் 29, 2026 12:00 AM

ADDED : அக் 28, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 12:00 AM ADDED : அக் 28, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: குப்பை அள்ளும் டெண்டரில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் குற்றச்சாட்டுக்கு, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா மறுப்பு தெரிவித்து உள்ளார்.

அவர் அளித்த பேட்டி:

பெங்களூரின் குப்பை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, 233 டெண்டர்கள் அறிவிக்கப்பட்டன. இந்த டெண்டர்களில் முறைகேடு நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் அசோக்கின் குற்றச்சாட்டில் துளியளவும் உண்மையில்லை. டெண்டர் பணிகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்தன.

பழைய குப்பை அள்ளும் வாகனங்களுக்கு பதிலாக, ஜி.பி.எஸ்., வசதியுடைய புதிய வாகனங்கள் செயல்பாட்டுக்கு வரும். பழைய வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. இதனால், புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்கும் டிப்பர் ஆட்டோக்களுக்கு பதிலாக பெரிய அளவிலான நான்கு சக்கர வாகனம் விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதில், அதிகளவு குப்பை சேகரித்து எடுத்து செல்லலாம்.

இந்த மாற்றங்கள் மூலம், நகரில் தினசரி 5,200 டன் குப்பை சேகரிக்கப்படுவது, 9,000 டன்னாக அதிகரிக்கும். துப்புரவு பணியாளர்களுக்கு முக அங்கீகாரம் உடைய வருகை பதிவேடு நடைமுறை அமலுக்கு வரும். வீடுகளின் முன்பக்கத்தில் குப்பையை வைத்தால், அவற்றை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து செல்வர்.

நவம்பர் 1ம் தேதி முதல், நவ., 31ம் தேதி வரை 'வார்டு ஒன்று' என்ற பிரசார இயக்கம் செயல்படுத்தப்படும்.

இதன் மூலம், சாலை, குடிநீர், தெருவிளக்கு, குப்பை போன்ற அடிப்படை பிரச்னைகள் முன்னுரிமை அடிப்படையில், வார்டு வாரியாக பல அடிப்படை பிரச்னைகள் தீர்க்கப்படும்.

இவ்வாறு பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us