தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹோட்டலில் அடிதடி

ஹோட்டலில் அடிதடி

ஹோட்டலில் அடிதடி


UPDATED : நவ 02, 2026 12:00 AM

ADDED : நவ 01, 2026 11:16 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 02, 2026 12:00 AM ADDED : நவ 01, 2026 11:16 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நுாடுல்ஸ் காரமாக இருந்ததாக கூறி, ஹோட்டல் உரிமையாளர்களை தாக்கிய மூன்று வாலிபர்களை போலீசார் தேடுகின்றனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் தபா, ஹேமா, லட்சுமி லமா ஆகியோர், பெங்களூரு தொட்டதோகூர் பகுதியில் சாலையோரத்தில் துரித உணவு கடை வைத்து உள்ளனர்.

இவர்களின் கடைக்கு நேற்று முன்தினம் இரவு, சாம்ராஜ்நகர் மாவட்டத்தை சேர்ந்த நாகராஜ், சந்துரு, தேவராஜ் ஆகியோர் வந்தனர். மதுபோதையில் இருந்தவர்கள், நுாடுல்ஸ் வாங்கி சாப்பிட்டனர்.

அப்போது, நுாடுல்ஸ் மிகவும் காரமாக இருப்பதாக கூறி, கடை உரிமையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின், கடையின் உரிமையாளர்களை தாக்கினர். அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us