தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு

ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு

ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 08:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹாசன்: ஹாசனாம்பா கோவில் நடை, 14 நாட்களுக்குப் பின், நேற்று பூட்டப்பட்டது. இனி, அடுத்தாண்டு தீபாவளியை ஒட்டி திறக்கப்படும்.

கர்நாடக மாநிலம், ஹாசனில் 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஹாசனாம்பா கோவில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை திறக்கப்படும் இக்கோவில், அக்., 29ம் தேதி திறக்கப்பட்டது.

அன்று முதல் தினமும் இரண்டு முதல் மூன்று லட்சம் என நேற்று வரை, 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

சிறப்பு தரிசன டிக்கெட்டுகளான 300 ரூபாய், 1,000 ரூபாய் மற்றும் பிரசாதம் விற்பனை மூலம், 25.36 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது.

முதல்வர் சிவகுமார், மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் என பலர் அம்மனை தரிசனம் செய்தனர்.

நிறைவு நாளான நேற்று காலை 6:00 மணி வரை அம்மன் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

பின், பாரம்பரிய முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு, மதியம் 1:37 மணிக்கு கருவறையின் கதவுகள் பூட்டப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட பொறுப்பு வகிக்கும் கலால் துறை அமைச்சர் சிவலிங்கே கவுடா, எம்.எல்.ஏ., ஸ்வரூப், எம்.பி., ஸ்ரேயாஸ் படேல், மாவட்ட கலெக்டர் லதாகுமாரி, கோவிலின் தலைமை அர்ச்சகர் நாகராஜ் உளளிட்டோர் பங்கேற்றனர். 14 நாட்களுக்கு பின் கோவில் கதவு நேற்று பூட்டப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us