தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய மனு உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி

கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய மனு உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி

கணவரிடம் ஜீவனாம்சம் கோரிய மனு உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘கணவர் வாங்கிய நிலத்தை விற்று, 27 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட மனைவிக்கு, ஜீவனாம்சம் அளிக்கும்படி உத்தரவிட முடியாது’ என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

மைசூரில் வசிக்கும் தம்பதியருக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். கணவருக்கு வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக, மனைவி குற்றம் சாட்டினார்.

வருவாய் இல்லை



தன் செலவுகளுக்கு பணம் தரும்படி, கணவருக்கு உத்தரவிட கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில், மனைவி மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், மனைவி பொருளாதாரத்தில் வலுவாக இருப்பதை அறிந்து, அவருக்கு கணவர் பணம் கொடுக்க வேண்டியது இல்லை என, 2022ன் ஜூலை 5ம் தேதியன்று, மனுவை தள்ளுபடி செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், மனைவி மேல் முறையீடு செய்தார்.

இந்த மனு, நீதிபதி சில்லகூரு சுமலதா முன்னிலையில், நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல். ‘மனுதாரரின் கணவர் மாதம் 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால் தனக்கு வருவாய் இல்லை என, கூறுகிறார்’ என வாதிட்டார்.

காரணங்கள் இல்லை



ஆவணங்களை ஆய்வு செய்த நீதிபதி, ‘மைசூரின் ஹுன்சூரில் இருந்த தன் பூர்வீக சொத்துக்களை, 2012ல் விற்ற கணவர், அந்த பணத்தில் மைசூரில் சொத்து வாங்கினார். இதை மனைவி பெயரில் பதிவு செய்திருந்தார்.

‘இதே சொத்தை மனைவி, 2019ன் ஜூன் 12ல் வேறு ஒருவருக்கு விற்று, 27 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இதை விசாரணையில் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

‘சொத்தை விற்ற பின், மனைவி காணாமல் போயுள்ளார்.

‘இது குறித்து கணவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார், அதன்பின் போலீசார் முன்னிலையில், மனைவி ஆஜரானதும், விசாரணையில் தெரிந்தது.

‘கணவருக்கு கள்ளத்தொடர்பு உள்ளதாக, மனைவி குற்றம்சாட்டுகிறார். ஆனால் இதை உறுதிப்படுத்தும் வகையில், எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை.

‘எனவே குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவில், உயர் நீதிமன்றம் தலையிட சரியான காரணங்கள் இல்லை’ என கூறி, மனைவியின் மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us