தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு

இன்று இனிதாக: பெங்களூரு


UPDATED : நவ 12, 2026 12:00 AM

ADDED : நவ 11, 2026 08:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 12, 2026 12:00 AM ADDED : நவ 11, 2026 08:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கந்த சஷ்டி



 கந்த சஷ்டியை ஒட்டி நகரின் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஸ்ரீகார்த்திகா அகோர முகம் ஹோமம், மூலகை ஹோமம், மஹா மங்களாரத்தி – காலை 7:30 மணி; ஸ்ரீ சுப்ரமண்ய மூல மந்திர ஹோமம், யானை வாகனத்தில் கோவில் பிராகரத்தில் சுவாமி ஊர்வலம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – மாலை 6:00 மணி. இடம்: மஹான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம் மற்றும் தண்டாயுதபாணி கோவில், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.

 சிறப்பு பூஜைகள் – மாலை 5:30 முதல் இரவ 7:30 மணி வரை. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.

 பாராயணம், கலச அர்ச்சனை, லட்சார்ச்சனை, தட்சிணாமூர்த்தி, பூர்ணாஹூதி, மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் – காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், ஹலசூரு.

 ஆதிசக்தி மாரியம்மன் கோவிலில் கந்தசஷ்டி பாராயணம், பாலமுருகனுக்கு அபிஷேகம், மஹா மங்களாரத்தி. மாலை 6:00 மணி. இடம்: ராபர்ட்சன்பேட்டை 4வது பிளாக், தங்கவயல்

26ம் ஆண்டு பிரவச்சன வாஹினி



 ராகிகுட்டா ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி பக்த மண்டலி அறக்கட்டளை சார்பில் 26ம் ஆண்டு பிரவச்சன வாஹியை ஒட்டி, ஸ்ரீ ராமாயண பிரசார கேந்திரா இயக்குனர் வித்வான் சுரேஷ் குமாரின் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணந்தா பாலகந்தா நிகழ்ச்சி – மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சம்ஸ்கிருதா மந்திர், ஒன்பதாவது பிளாக், ஜெயநகர்.

லேசர் ஷோ



 அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது ‘4கே புரொஜக் ஷன் மேப்பிங்’ நிகழ்ச்சி – இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு.

பொது

தியான நிகழ்ச்சி



 வாழும் கலை அமைப்பு சார்பில் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, ஆரோக்கியமான, மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை அடைய யோகா, பாராயணம், தியானம் – காலை 6:00 முதல் 8:30 மணி வரையிலும்; 10:30 முதல் மதியம் 1:00 மணி வரையிலும்; மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரையிலும். இடம்: அமைப்பு வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு.

சாக்லேட் பயிற்சி



 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சாக்லேட் செய்ய பயிற்சி – இரவு 7:15 முதல் 9:15 மணி வரை. இடம்: பேப்ரிசோ கிரியேடிவ் ஹப், 447, ஆறாவது பிதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே – அவுட்.

திபெத் ஓவிய பயிற்சி



 திபெத் ஓவிய பயிற்சி – இரவு 7:02 முதல் 9:02 மணி வரை. இடம்: எக்ஸ்பிரஸ் சோல் கபே, 4, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us