/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சரியான காரணமின்றி விவாகரத்து தர முடியாது கணவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
/
சரியான காரணமின்றி விவாகரத்து தர முடியாது கணவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சரியான காரணமின்றி விவாகரத்து தர முடியாது கணவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
சரியான காரணமின்றி விவாகரத்து தர முடியாது கணவர் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
ADDED : செப் 07, 2025 10:52 PM
பெங்களூரு : 'பெற்றோர் ஒருங்கிணைப்புடன் வாழ்க்கை நடத்தாவிட்டால், குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படும். சரியான காரணம் இல்லாமல், விவாகரத்து அளிக்க முடியாது' என, கருத்து தெரிவித்த கர்நாடக உயர் நீதிமன்றம், விவாகரத்து கோரிய நபரின் மனுவை தள்ளுபடி செய்தது.
மாண்டியா மாவட்டம், மலவள்ளி தாலுகாவை சேர்ந்த நபர், மைசூரில் பால் விற்பனை கடை வைத்துள்ளார்.
இவருக்கு திருமணமாகி, ஒரு ஆண் குழந்தை உள்ளது. தன் மனைவியின் சகோதரருடன், அந்நபர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்கிறார். தொழிலில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அந்நபர் மீது மைத்துனர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மலவள்ளி நீதிமன்றம் இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்த கணவர், மலவள்ளியின் ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.
அதில், 'தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், என்னை மனைவி இம்சிக்கிறார். என்னால் அவருடன் வாழ முடியாது. எனவே விவாகரத்து வழங்க வேண்டும்' என கோரினார்.
இதை விசாரித்த நீதிமன்றம், 'மனைவி, தன் கணவரை துன்புறுத்தியதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை' என, கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்ர்த்து ஐகோர்ட்டில், கணவர் மனுதாக்கல் செய்தார். இம்மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, 'மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல், 'தொழிலில் மைத்துனருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், தன்னை மனைவி கொடுமைப்படுத்துவதாக பொய்யான குற்றம்சாட்டி, மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டு, திருமணம் நடந்துள்ளது. மனைவி மீது கணவர் சுமத்திய குற்றச்சாட்டுகள் பொய்யானவை' என வாதிட்டார்.
எதிர்காலம் வாதம், பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிமன்றம், 'மனுதாரரும், அவரது மனைவியும் நல்ல முறையில் வாழ்க்கை நடத்துகின்றனர்.
'மனுதாரரை மனைவி துன்புறுத்தியதற்கு, ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை. அக்கம், பக்கத்தினர் சாட்சியங்களும் இல்லை. தன் குடும்பத்தினர் மனைவி, வரதட்சணை புகார் அளித்ததாக மனுதாரர் கூறியுள்ளார்.
'ஆனால் அதற்கான சாட்சியங்கள் அளிக்கவில்லை. பெற்றோர் ஒருங்கிணைப்புடன் வாழ்க்கை நடத்தாவிட்டால், குழந்தைகளின் கல்வி, எதிர்காலம் பாதிக்கப்படும்.
'சரியான காரணம் இல்லாமல், விவாகரத்து அளிக்க முடியாது. மனைவியுடன் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தட்டும்' என கூறி அவரது மனுவை, தள்ளுபடி செய்தது.