/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணிகளில் அலட்சியம் சுகாதார அதிகாரி 'சஸ்பெண்ட்'
/
பணிகளில் அலட்சியம் சுகாதார அதிகாரி 'சஸ்பெண்ட்'
ADDED : மே 17, 2025 11:14 PM
பெங்களூரு: இந்திரா உணவகத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு தொடர்பாக, பெங்களூரு தெற்கு துணை சுகாதார அதிகாரி 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பெங்களூரு தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், இந்திரா உணவகங்களை நிர்வகிக்கும் பொறுப்பை, சிப்டாக் புட் அண்ட் ஹாஸ்பிடாலடி சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஏற்றுள்ளது.
இந்திரா உணவகங்களுக்கு உணவு வினியோகித்த இந்நிறுவனத்துக்கு, 2 கோடியே 27 லட்சத்து 34,474 ரூபாய், பில் தொகை வழங்க வேண்டியிருந்தது.
பில் தொகை வழங்கும்படி, பெங்களூரு தெற்கு மண்டல துணை சுகாதார அதிகாரி கல்பனாவிடம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் பில்களை ஆய்வு செய்யாமல், 9 கோடியே 72 லட்சத்து 21,787 ரூபாயை கல்பனா விடுவித்தார். பில் தொகையை விட, கூடுதலாக 7,00,12,396 ரூபாய் வழங்கியுள்ளார்.
கணக்கு தணிக்கையின்போது, இவரது குளறுபடி வெளிச்சத்துக்கு வந்தது. இவரது அலட்சியத்தால், மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளார். எனவே இவரை சஸ்பெண்ட் செய்து, மாநகராட்சி சிறப்பு கமிஷனர், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.