/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிலத்தை ஆக்கிரமித்து தர்ஹா அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
/
நிலத்தை ஆக்கிரமித்து தர்ஹா அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
நிலத்தை ஆக்கிரமித்து தர்ஹா அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
நிலத்தை ஆக்கிரமித்து தர்ஹா அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஏப் 23, 2025 06:57 AM
பெங்களூரு ; அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வரும் தர்ஹா பணிகளை நிறுத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி, அரசுக்கு உயர் நீதிமன்றம் 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
ஹாவேரி ராட்டிஹள்ளி டவுன் தவரகி தும்மின கட்டி சாலையில் அரசுக்கு சொந்தமான நிலம் சர்வே எண்: 90, 91ஐ ஆக்கிரமித்து தர்ஹா கட்டப்பட்டு வருகிறது.
கட்டுமான பணிகளை உடனே நிறுத்த, ஹாவேரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடும்படி, உயர் நீதிமன்றத்தில் சோமசேகர் என்பவர் பொதுநலன் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் விசாரித்தனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பதில் மனுத் தாக்கல் செய்ய மாநில அரசு, ஹாவேரி கலெக்டர், ராட்டிஹள்ளி தாசில்தாருக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர். மனு மீதான அடுத்த விசாரணையை ஜூலை 9ம் தேதி ஒத்திவைத்தனர்.