/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் மேல்முறையீடு அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
/
பிரஜ்வல் மேல்முறையீடு அரசுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
ADDED : அக் 10, 2025 04:41 AM
பெங்களூரு: பலாத்கார வழக்கில் விதிக்கப்பட்ட சாகும் வரை சிறை தண்டனையை எதிர்த்து, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக, ஆட்சேபனை தாக்கல் செய்ய அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 34. இவர் மீது நான்கு பலாத்கார வழக்குகள் உள்ளன. இரண்டாவது வழக்கில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு கூறியது.
பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் அதிரடி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பிரஜ்வல் தரப்பில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் கே.எஸ்.முட்கல், வெங்கடேஷ் நாயக் ஆகியோர் அடங்கிய இருநபர் அமர்வு விசாரிக்கிறது. நேற்று நடந்த விசாரணையின்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆட்சேபனை தாக்கல் செய்ய அரசுக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டனர்.
'விசாரணை நீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது, அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் வாதிட்டார். அதுபோல இங்கும் வாதிட சிறப்பு வக்கீல் நியமிக்கப்படுவாரா என்பதையும், அரசு தெரிவிக்க வேண்டும்' என, நீதிபதிகள் வாய்மொழியாக உத்தரவிட்டனர்.
பின், மனு மீதான விசாரணையை 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.