/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பஸ் நிலையத்தை இடித்து சதுக்கம் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
/
பஸ் நிலையத்தை இடித்து சதுக்கம் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பஸ் நிலையத்தை இடித்து சதுக்கம் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பஸ் நிலையத்தை இடித்து சதுக்கம் அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
ADDED : ஜூலை 31, 2025 06:17 AM
பெங்களூரு : விஜயபுராவில் அரசு நிலத்தில் உள்ள பஸ் நிலையத்தின் ஒரு பகுதியை இடித்து, சதுக்கம் அமைக்க முற்படும் தனி நபர்களின் செயல் குறித்து விளக்கம் அளிக்கும்படி, மாநில அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும், இடித்தவர்களுக்கும் கர்நாடக உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
விஜயபுரா மாவட்டம், பசவனபாகேவாடியின் முதகி கிராமத்தை சேர்ந்த விமல் கோவிந்தப்பா தாக்கல் செய்த பொது நல மனு:
முதகி கிராம பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் அரசு நிலத்தில் பஸ் நிலைய ம் கட்டப்பட்டுள்ளது. 2024 ஏப்ரலில், சுரேஷ், ஈரண்ணா, மஞ்சுநாத் ஆகியோர் பஸ் நிலையத்தில் ஒரு பகுதி சுவற்றை இடித்து, சதுக்கம் அமைக்கின்றனர்.
இப்பணியை நிறுத்தும்படி, பொதுப்பணி துறையினர் நோட்டீஸ் அனுப்பியும் கேட்கவில்லை. சதுக்கத்தில் கித்துார் ராணி சென்னம்மா உருவ சிலை நிறுவ உள்ளதாக தெரிவித்தனர்.
எங்களுக்கு சிலைகளை நிறுவதில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால், அரசு சொத்தான பஸ் நிலையத்தை இடித்து, அங்கு பணி நடத்துவது சட்டவிரோதம். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தில் முறையிட்டும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க, மாவட்ட நிர்வாகத்துக்கும், சம்பந்தப்பட்டவர்களுக்கும் உத்தரவிட வே ண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது அவர்கள், 'பஸ் நிலைத்தை இடித்த சுரேஷ், ஈரண்ணா, மஞ்சுநாத் மீது நட வடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம், கிராம மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலர், விஜயபுரா மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., முதகி கிராம பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரிகள், அரசுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்.
'சட்டவிரோதமாக நடந்து வரும் பணியை, வருவாய் துறையினர் நிறுத்த வேண்டும்' என கூறி, நவ., 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.