தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

 கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்

 கணவர் மீது மனைவி தொடர்ந்த வழக்கு இடைக்கால தடை விதித்தது ஐகோர்ட்


ADDED : ஜூலை 16, 2026 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: வெளி நாட்டில் இருந்து, நீண்ட நாட்களுக்கு பின், வீட்டுக்கு வந்த கணவர் மீது மனைவி பதிவு செய்த வழக்குக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

பெங்களூரின், குந்தலஹள்ளியில் வசிப்பவர் சத்ய நாராயணா, 40. இவரது மனைவி சுமித்ரா, 35. தம்பதிக்கு, 14 வயது மகன் உள்ளார், குடும்ப விஷயமாக, தம்பதிக்குள் மனக்கசப்பு இருந்தது.

இதற்கிடையே, பணி நிமித்தமா க, பிரிட்டன் நாட்டின் தலைநகர் இங்கிலாந்துக்கு சென்ற கணவர், பல ஆண்டுகளாக அங்கேயே இருந்தார். அவர் திரும்பி வருவதற்குள், அவர் மீது அவரின் மனைவி, எட்டு கிரிமினல் வழக்குகளை பதிவு செய்திருந்தார்.

சில மாதங்களுக்கு முன், சத்ய நாராயணா வெளிநாட்டில் இருந்து திரும்பினார். தன் வீட்டுக்கு சென்றார். ஆனால் கணவர் வீட்டுக்கு வந்ததை விரும்பாத சுமித்ரா, அத்துமீறி தன் வீட்டுக்குள் நுழைந்ததாக, மஹாதேவபுரா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யும்படி கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சத்யநாராயணா மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு குறித்து, நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில், நேற்று முன்தினம் விசாரணை நடந்தது.

கணவர் தரப்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரர் தான் சுயமாக சம்பாதித்து வாங்கிய வீட்டுக்கு சென்றால், அது அத்துமீறி சென்றதாக ஆகாது. இந்த வீடு கணவர், மனைவியின் பெயரில் உள்ளது. மனைவி மனுதாரரான கணவர் மீது, 10 வழக்குகளை தொடர்ந்துள்ளார். இத்தனை வழக்குகள் இருந்தால், கணவரின் வாழ்க்கை எப்படி இருக்கும்; அவரால் பணிக்கும் செல்ல முடியவில்லை.

தினமும் நீதிமன்றங்களுக்கும், வக்கீல் வீட்டுக்கும் அலைகிறார். சட்டத்தை மனைவி தவறாக பயன்படுத்தி, கணவருக்கு தொந்தரவு கொடுக்கிறார். இவரை நீதிமன்றம் தான் காப்பாற்ற வேண்டும். இவரால் தன் மகனையும் பார்க்க முடியவில்லை.

மனைவி தரப்பில் ஆஜரான வக்கீல், 'கடந்த, 2021ல் தம்பதி பரஸ்பரம் ஒப்புதலின்படி, விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். விரைவில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, இங்கிலாந்துக்கு செல்ல வேண்டும் என்பது, கணவரின் விருப்பமாகும்' என, வாதிட்டார்.

வாதம், பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிபதி நாகபிரசன்னா, மனுதாரர் மீதான வழக்குக்கு, இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us