/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மது அருந்தியதை பரிசோதிக்கும் 'ஆல்கோ மீட்டர்' மாநில அரசு, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் கேள்வி
/
மது அருந்தியதை பரிசோதிக்கும் 'ஆல்கோ மீட்டர்' மாநில அரசு, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் கேள்வி
மது அருந்தியதை பரிசோதிக்கும் 'ஆல்கோ மீட்டர்' மாநில அரசு, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் கேள்வி
மது அருந்தியதை பரிசோதிக்கும் 'ஆல்கோ மீட்டர்' மாநில அரசு, போலீஸ் கமிஷனருக்கு ஐகோர்ட் கேள்வி
ADDED : ஆக 30, 2025 03:26 AM

பெங்களூரு: 'குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை சோதிக்க பயன்படுத்தப்படும் 'ஆல்கோ மீட்டர் எனும் மூச்சு பகுப்பாய்வு கருவி' எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது? குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன?' என, நகர போக்குவரத்து போலீசாருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச் செல்வதால், விபத்துகள் நிகழ்கின்றன. இதைத் தடுக்க, இரவு நேரத்தில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபடுகின்றனர்.
வாகனம் ஓட்டுபவர் மது குடித்துள்ளாரா என்பதை கண்டறிய, 'ஆல்கோ மீட்டர்' பயன்படுகிறது.
அபராதம் அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த அஜய் குமார் காஷ்யப் வந்த காரை நிறுத்திய போலீசார், மது அருந்தி உள்ளாரா என்பதை பரிசோதிக்க முயன்றனர். அவர் வாயில் ஆல்கோ மீட்டரை வைத்து ஊதும்படி கூறினர். அவர் இரண்டு முறை ஊதியும் குடிக்கவில்லை என்று காட்டியது.
மூன்றாவது முறையாக மீண்டும் ஊதுமா று போலீசார் கேட்டுக் கொண்டனர். அவரும் ஊதினார். அப்போது அவர் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக மது அருந்தி உள்ளதாக காட்டியது.
இதையடுத்து போலீசார், அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அவர் மது அருந்தவில்லை என்று கூறியும், போலீசார் கேட்கவில்லை. அபராதம் விதித்தனர்.
இதையடுத்து, மாநில உயர் நீதிமன்றத்தில் அஜய் குமார் காஷ்யப் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'போக்குவரத்து போலீசார் என்னை பரிசோதிக்கும் முன்பு, ஆல்கோ மீட்டரை கருவியை சோதிக்கவில்லை. அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனைக்காக என்னுடன் வருமாறு அழைத்தபோதும் போலீசார் வரவில்லை.
'ஆனாலும் எனக்கு அபராதம் விதித்து, வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தனியார் ரத்த பரிசோதனை மையத்துக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டேன். அதில் மது அருந்தியதற்கான எந்த அறிகுறியும் இல்லை அறிக்கை வந்துள்ளது' என்று குறிப்பிட்டிருந்தார்.
விளக்கம் இம்மனு, நீதிபதி ஷியாம் பிரசாத் முன் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஷியாம் பிரசாத் பிறப்பித்த உத்தரவு:
வாகன ஓட்டிகளை பரிசோதனை செய்யும்போது, அவர்கள் குடித்துள்ளார்களா, இல்லையா என்பதை பரிசோதிக்கும் கருவியை, போக்குவரத்து போலீசார் சேதப்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இக்கருவிகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன? குறைபாடுகள் இல்லை என்பதை உறுதி செய்ய பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன என்பதை விளக்கி, பதில் மனு தாக்கல் செய்ய மாநில அரசு, போக்குவரத்து போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். மனு மீது செப்., 3ம் தேதி மீண்டும் விசாரணை நடைபெறும்.
இவ்வாறு உத்தரவில் நீதிபதி தெரிவித்தார்.