/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர் டிஸ்மிஸ் செய்தது சரியேயென ஐகோர்ட் தீர்ப்பு
/
பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர் டிஸ்மிஸ் செய்தது சரியேயென ஐகோர்ட் தீர்ப்பு
பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர் டிஸ்மிஸ் செய்தது சரியேயென ஐகோர்ட் தீர்ப்பு
பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநர் டிஸ்மிஸ் செய்தது சரியேயென ஐகோர்ட் தீர்ப்பு
ADDED : ஆக 02, 2025 01:49 AM
பெங்களூரு: போலி ஆவணங்களை சமர்ப்பித்து, பஸ் ஓட்டுநர் பணிக்கு சேர்ந்தவரை பணி நீக்கம் செய்த பி.எம்.டி.சி.,யின் உத்தரவை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
பெங்களூரு, தொட்டகுப்பியின் யரப்பனஹள்ளியை சேர்ந்தவர் மலுரப்பா. 1988ல் பி.எம்.டி.சி., பஸ் ஓட்டுநராக பணியில் சேர்ந்தார். அப்போது, ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளதற்கான சான்றிதழை சமர்ப்பித்தார். பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.
கடந்த 2001ல் அவரின் ஆவணங்கள் போலி என்பதை கண்டுபிடித்த பி.எம்.டி.சி., நிர்வாகம், விசா ரணை மேற்கொண்டது. ஓட்டுநர் பதவிக்கு குறைந்தபட்சம் நான்காம் வகுப்பு படித்திருக்க வேண்டும் என, பி.எம்.டி.சி., கல்வி தகுதி நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் ஒன்றாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள அவர் ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளதாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்தது உறுதியானது.
இதையடுத்து, 2005ல் அவரை பணியில் இருந்து பி.எம்.டி.சி., நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது. இதை எதிர்த்து, தொழிலாளர் நல நீதிமன்றத்தில், மலுரப்பா முறையிட்டார். இவ்வழக்கு விசாரணை 11 ஆண்டுகளாக நடந்து வந்தது. 2016ல் தொழிலாளர் நீதிமன்றம், 'மலுரப்பாவை டிஸ்மிஸ் செய்தது மிகவும் பெரிய தண்டனையாகும். எனவே, அவரை பணியில் சேர்த்து, மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டாம்' என தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், 2017ல் பி.எம்.டி.சி., நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, பி.எம்.டி.சி., நிர்வாகம் டிஸ்மிஸ் செய்ததை உறுதி செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, இருநபர் அமர்வில், மலுரப்பா மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனுவை தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து கடந்த மாதம் 25ல் தீர்ப்பளித்தது
ஒரு நபர் அமர்வு நீதிபதி உத்தரவை இந்த அமர்வு உறுதி செய்தது. ஓட்டுநர் பணிக்கு கேட்கப்பட்டிருந்த கல்வி தகுதி இல்லை என்பது தெரிந்தும், போலி ஆவணங்களை உருவாக்கி மலுரப்பா சேர்ந்துள்ளார். எனவே, அவரை டிஸ்மிஸ் செய்தது சரியே' என, உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.