/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்லை பிரச்னை கண்காணிப்பு ஹெச்.கே.பாட்டீல் நியமனம்
/
எல்லை பிரச்னை கண்காணிப்பு ஹெச்.கே.பாட்டீல் நியமனம்
எல்லை பிரச்னை கண்காணிப்பு ஹெச்.கே.பாட்டீல் நியமனம்
எல்லை பிரச்னை கண்காணிப்பு ஹெச்.கே.பாட்டீல் நியமனம்
ADDED : ஜூலை 02, 2025 06:30 AM

பெங்களூரு: கர்நாடகா - மஹாராஷ்டிரா இடையில் எல்லை பிரச்னை உள்ளது. கர்நாடகாவின் பெலகாவி, கார்வார், பீதர், கலபுரகியில் மராத்தி மொழி பேசும் மக்கள் வசிக்கும் 814 கிராமங்களுக்கு மஹாராஷ்டிரா சொந்தம் கொண்டாடி வருகிறது.
இந்த கிராமங்களை மஹாராஷ்டிராவுடன் இணைக்க, கர்நாடக அரசுடன் பேச்சு நடத்த, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் துணை முதல்வர்கள் அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே, முன்னாள் முதல்வர்கள் சரத் பவார், நாராயண் ரானே, பிருத்விராஜ் சவான் உட்பட 18 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கர்நாடகாவிலும் எல்லை, நதிநீர் தொடர்பான பிரச்னையை கண்காணிக்க அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்று, கன்னட அமைப்புகள், அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதை ஏற்றுக்கொண்ட அரசு, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீலை, எல்லை, நதிநீர் பிரச்னையை கண்காணிக்கும் அமைச்சராக நியமித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
எல்லை, நதிநீர் பிரச்னையில் உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளின் விசாரணையின்போது, சட்ட வல்லுநர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குவது.
எல்லை கிராமங்களுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டு, அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் கிடைக்க உதவுவது. மாநில, மத்திய அரசுகளுக்கு இடையில் பாலமாக செயல்படுவது உள்ளிட்ட பணிகளை, ஹெச்.கே.பாட்டீல் மேற்கொள்ள உள்ளார். இவர், முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் எல்லை கண்காணிப்பு அமைச்சராக இருந்தார்.