/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் குறித்து அவதுாறு ஊர்க்காவல் படை வீரர் கைது
/
முதல்வர் குறித்து அவதுாறு ஊர்க்காவல் படை வீரர் கைது
முதல்வர் குறித்து அவதுாறு ஊர்க்காவல் படை வீரர் கைது
முதல்வர் குறித்து அவதுாறு ஊர்க்காவல் படை வீரர் கைது
ADDED : மே 06, 2025 05:26 AM
உடுப்பி: முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக, சமூக வலைளத்தில் ஆட்சேபனைக்குரிய கருத்து பதிவிட்ட, ஊர்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரில் பஜ்ரங் தள் பிரமுகர் சுஹாஸ் ஷெட்டி கொலையை கண்டித்து, பெங்களூரில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்த சம்பத் சலியன், தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
அதில், 'அரசியல் காரணங்களால் முதல்வர் சித்தராமையா கொல்லப்பட்டால் தான், ஹிந்துக்கள் சந்தோஷமாக இருப்பர்' என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். உடுப்பியை சேர்ந்த சுரஜ் என்பவர், கார்காலா நகர போலீசில் அளித்த புகாரில், 'அரசியல் தலைவர்களையும், ஹிந்துக்களையும் துாண்டிவிட்டு, வெறுப்பை பரப்பும் நோக்கில், சமூக வலைதளங்களில் வீடியோ பரப்பி உள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.
விசாரணை நடத்திய போலீசார், பெங்களூரில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் பணியாற்றி வந்த சம்பத் சலியனை, நேற்று முன்தினம் கைது செய்தனர். நேற்று அவர், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.