ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ஏப்., 5 முதல் சிறப்பு ரயில்
ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் ஏப்., 5 முதல் சிறப்பு ரயில்
ADDED : மார் 26, 2026 12:51 AM
பெங்களூரு: 'கோடை கால பயணியர் வசதிக்காக, ஹூப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வாரத்தில் ஒரு நாள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்' என தென்மேற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ரயில் எண் 07355: எஸ். எஸ்.எஸ். ஹூப்பள்ளி - ராமேஸ்வரம் வாரந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 5, 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31 ஆகிய நாட்களில் எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி ரயில் நிலையத்தில் இருந்து ஞாயிற்று கிழமை தோறும் காலை 6:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:20 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் எண் 07356: ராமேஸ்வரம் - எஸ்.எஸ்.எஸ்.ஹூப்பள்ளி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்., 6, 13, 20, 27, மே 4, 11, 18, 25, ஜூன் 1 நாட்களில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து திங்கட்கிழமை தோறும் இரவு 8:00 மணிக்கு புறப்பட்டு மறு நாள் இரவு 7:40 மணிக்கு எஸ்.எஸ்.எஸ். ஹூப்பள்ளி வந்தடையும்.
இந்த ரயில், எஸ்.எம்.எம். ஹாவேரி, ராணிபென்னுார், ஹரிஹர், தாவணகெரே, சிக்கஜஜுர், பிரூர், அரிசிகெரே, திப்டூர், துமகூரு, பானஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, ராமநாதபுரம் ஆகிய ரயில் நிலைங்களில் நின்று செல்லும்.
சிறப்பு ரயில்களாக இயங்கி வந்த 02863 / 02864 மேற்கு வங்கத்தின் சந்திரகாச்சி - எலஹங்கா வாராந்திர ரயில், நிரந்தரமாக்கப்பட்டு உள்ளது. எனவே, ஏப்ரல் மாதத்தில் இருந்து இந்த ரயில் 18063 / 18064 என்ற எண்களில் இயக்கப்பட உள்ளன.
ரயில் எண் 18063: சந்திரகாச்சி - எலஹங்கா வாராந்திர சிறப்பு ரயில், ஏப்., 2ம் தேதி முதல் வியாழக்கிழமை தோறும் சந்திரகாச்சியில் இருந்து அதிகாலை 12:50 மணிக்கு புறப்பட்டு, சனிக்கிழமை அதிகாலை 12:20 மணிக்கு எலஹங்கா வந்தடையும்.
மறுமார்க்கத்தில் எண் 18064: எலஹங்கா - சந்திரகாச்சி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்., 4ம் தேதி முதல் சனிக்கிழமை தோறும் அதிகாலை 4:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 5:00 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
