/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஹொசகெரேஹள்ளி மேம்பால பணி 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
/
ஹொசகெரேஹள்ளி மேம்பால பணி 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
ஹொசகெரேஹள்ளி மேம்பால பணி 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
ஹொசகெரேஹள்ளி மேம்பால பணி 3 மாதத்தில் முடிக்க உத்தரவு
ADDED : ஜூன் 01, 2025 06:49 AM

ராஜராஜேஸ்வரி நகர்: ஹொசகெரேஹள்ளி மேம்பாலப் பணிகளை மூன்று மாதங்களுக்குள் முடிக்குமாறு மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ராஜராஜேஸ்வரி நகர் மண்டலத்தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
இப்பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் மஹேஸ்வர ராவ், மண்டல கமிஷனர் சதீஷ், தலைமை பொறியாளர்கள் லோகேஷ், ராஜேஷ், நிர்வாக பொறியாளர்கள் மற்றும் பல அதிகாரிகள் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அதிகாரிகளுக்கு பல உத்தரவுகள், அறிவுறுத்தல்களை அவர் வழங்கினார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஹொசகெரேஹள்ளி மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி, நிர்ணயிக்கப்பட்ட மூன்று மாதங்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும். 500 மீட்டர் நீளமுள்ள மேம்பால திட்டத்தில் 75 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
சர்வீஸ் சாலையை அகலப்படுத்துவதற்கான திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடித்து, பெங்களூரு நகர போக்குவரத்து போலீஸ் துறையுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
நாயண்டஹள்ளி சந்திப்பில் சர்வீஸ் சாலையோர நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். வாகன போக்குவரத்து சீராக இருக்கும் வகையில், மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்துவது அவசியம்.
அதேபோல, மழை நீர் வடிகால்கள் சுத்தம் செய்யப்பட வேண்டும். மாநகராட்சி நிலங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
விருஷபாவதி பகுதியில் கூடுதலாக பாலம் கட்டுவதற்கு உலக வங்கியிடமிருந்து நிதியுதவி பெற உள்ளது. நிதி கிடைத்தவுடன், டெண்டர் கோரப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்.
மைசூரு சாலையில் உள்ள கோபாலன் மால் அருகே நடக்கும் மேம்பாலப் பணிகள் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. இதனால், பணிகள் துவக்கப்படவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
இந்த பகுதிக்கு அருகிலுள்ள ராஜகால்வாயில் ஏதேனும் ஆக்கிரமிப்புகள் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.