/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராகுலுக்கு எவ்வளவு கமிஷன்? சிவகுமாருக்கு அசோக் கேள்வி
/
ராகுலுக்கு எவ்வளவு கமிஷன்? சிவகுமாருக்கு அசோக் கேள்வி
ராகுலுக்கு எவ்வளவு கமிஷன்? சிவகுமாருக்கு அசோக் கேள்வி
ராகுலுக்கு எவ்வளவு கமிஷன்? சிவகுமாருக்கு அசோக் கேள்வி
ADDED : அக் 28, 2025 04:28 AM

பெங்களூரு: 'பெங்களூரில் சுரங்கப்பாதை அமைப்பதில் துணை முதல்வர் சிவகுமார் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்? இதில், ராகுலுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் எவ்வளவு கமிஷன் செல்கிறது?' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் கேள்வி எழுப்பினார்.
பெங்களூரில் ஹெப்பாலில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு வரையில் 19,000 கோடி ரூபாய் செலவில் சுரங்கப்பாதை அமைக்க டெண்டர் அழைக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தொடரப்பட்ட மனு தொடர்பாக விளக்கம் கேட்டு, அரசுக்கும், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், தன் 'எக்ஸ்' பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெங்களூரில் சுரங்கப்பாதை அமைப்பதில் சிவகுமார் ஏன் பிடிவாதமாக இருக்கிறார்? இதில், ராகுலுக்கும், காங்கிரஸ் தலைமைக்கும் எவ்வளவு கமிஷன் செல்கிறது?
இத்திட்டத்துக்கு, இந்திய அறிவியல் மையம், விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், சுரங்கப்பாதை அமைத்தே தீருவேன் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? சுரங்கப்பாதைக்கும், உங்களின் முதல்வர் கனவுக்கும் தொடர்பு உள்ளதா?
இத்திட்டத்தை அமல்படுத்தி பெங்களூரு மக்களுக்கு வில்லனாக வேண்டாம். இத்திட்டத்தால், நிலத்தடி குடிநீர், ஆழ்துளை கிணறுகள் பாதிக்கப்படும். நகரின் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். நகரின் நுரையீரலாக இருக்கும் கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசலுக்கு சுரங்கப்பாதை தீர்வாகாது.
இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.

