ஹுப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
ஹுப்பள்ளி - ராமேஸ்வரம் ரயில் ஆக., 31 வரை நீட்டிப்பு
ADDED : ஜூலை 29, 2026 02:55 AM
பெங்களூரு: பயணியர் வசதிக்காக, ஹுப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில், ஆக. 31ம் தேதி வரை நீட்டிக்கபபடுகிறது.
தென்மேற்கு ரயில்வே அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது:
* ரயில் எண் 07355 ஹூ ப்பள்ளி - ராமேஸ்வரம் வாராந்திர விரைவு சிறப்பு ரயில், ஆக., 2 முதல் 30ம் தேதி வரையும்; மறு மார்க்கத்தில் 07356 ராமேஸ்வரம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில், ஆக., 3 முதல் 31ம் தேதி வரையும் நீட்டிக் கப்பட்டு உள்ளது.
* ஓணம் பண்டிகையை ஒட்டி, ரயில் எண் 07351 ஹூப்பள்ளி - கோட்டயம் சிறப்பு ரயில், ஹூப்பள்ளியில் இருந்து ஆக., 25ம் தேதி செவ்வாய்கிழமை மாலை 6:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:40 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
மறு மார்க்கத்தில் 07352 கோட்டயம் - ஹூப்பள்ளி விரைவு சிறப்பு ரயில், கோட்டயத்தில் இருந்து ஆக., 26ம் தேதி புதன்கிழமை இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:00 மணிக்கு எஸ்.எஸ்.எஸ்., ஹூப்பள்ளி வந்தடையும்.
* எண் 07353 ஹூப்பள்ளி - கோட்டயம் விரைவு சிறப்பு ரயில், ஹூப்பள்ளியில் இருந்து ஆக., 29 ம் தேதி சனிக்கிழமை மதியம் 3:15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 4:15 மணிக்கு கோட்டயம் சென்றடையும்.
கோட்டயம் - ஹூப்பள்ளி சிறப்பு ரயில், கோட்டயத்தில் இருந்து ஆக., 30ம் தேதி ஞாயிற்றுகிழமை இரவு 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8:05 மணிக்கு ஹூப்பள்ளி வந்தடையும்.
ஓணம் சிறப்பு ரயில்கள் ஹாவேரி, தாவணகெரே, பிரூர், அர்சிகெரே, துமகூரு, எஸ்.எம்.வி.டி., பெங்களூரு, கே.ஆர்.,புரம், பங்கார்பேட், சேலம், எர்ணாகுளம் வழியாக செல்லும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
