வரும் ஆக., 13 முதல் 27 வரை மழைக்கால கூட்டத்தொடர்
வரும் ஆக., 13 முதல் 27 வரை மழைக்கால கூட்டத்தொடர்
ADDED : ஜூலை 29, 2026 02:54 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: 'கர்நாடக மழைக்கால கூட்டத்தொடர், ஆக., 13 முதல், 27ம் தேதி வரை நடக்கிறது' என, சட்டசபை செயலர் விசாலாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள தாவது:
கர்நாடக மழைக்கால சட்டசபை, மேல்சபை கூட்டத்தொடர், ஆக., 13ம் தேதி காலை 11:00 மணிக்கு துவங்குகிறது. இக்கூட்டம், ஆக., 27ம் தேதி வரை நடக்கிறது. இக்கூட்டத்தொடரின் போது, புதிய அமைச்சர்கள் பங்கேற்பர்.
ஆக., 15, 16, 22, 23, 26ம் தேதிகளில் பொது விடுமுறையாகும். மற்ற நாட்களில் விவாதம் நடக்கும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
பத்து நாட்களே நடக்கும் கூட்டத்தொடரில் பிடதி டவுன்ஷிப் விவகாரம், கே.பி.எஸ்.சி., ஆட்சேர்ப்பு முறைகேடு, தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிடப்படாதது குறித்து விவாதம் நடக்க வாய்ப்பு உள்ளது.
