/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை
/
குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை
குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை
குழந்தைகளுடன் மனைவி சென்றதால் கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை
ADDED : செப் 05, 2025 11:03 PM
ராய்ச்சூர்: சிறு விஷயத்துக்காக கோபித்துக் கொண்டு, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு மனைவி சென்றதால், கால்வாயில் குதித்து கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசகூர் தாலுகாவின், சிக்க உப்பேரி கிராமத்தில் வசித்தவர் ஈரண்ணா, 40. இவர் சுகாதாரத்துறையில் '108' ஆம்புலன்ஸ் ஊழியராக பணியாற்றினார்.
இவருக்கும், விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹால் தாலுகாவின், ஹலசகி கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கும், 13 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
திருமணமான புதிதில், நன்றாக இருந்த மனைவியின் குணம் நாளடைவில் மாறியது. 'கூட்டு குடும்பத்தை விட்டு, தனிக்குடித்தனம் செல்ல வேண்டும்' என, பிடிவாதம் பிடித்தார்.
ஆனால் பெற்றோரை விட்டு பிரிந்து செல்ல, ஈரண்ணாவுக்கு விருப்பம் இல்லை. இதனால் தம்பதிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
சிறு, சிறு காரணங்களுக்கும் மனைவி வாக்குவாதம் செய்தார்.
கோபித்துக் கொண்டு மனைவி, குழந்தைகளுடன் பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டார். ஊர் பெரியவர்கள் சமாதானம் செய்தும் பயன் இல்லை. மனைவி மனம் மாறவில்லை.
குழந்தைகள் மீது அதிக பாசம் வைத்திருந்த ஈரண்ணா, குழந்தைகளை பார்க்க முடியாமல் வருத்தம் அடைந்தார். இதுவே அவரை குடிப்பழக்கத்தில் தள்ளியது.
பல முறை மனைவியின் வீட்டுக்கு அழைத்தும் வர மறுத்தார். இதனால் மனம் வருந்திய ஈரண்ணா, நேற்று அதிகாலை, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
லிங்கசகூர் போலீசார் விசாரிக்கின்றனர்.