/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'நான் கிரிக்கெட் நிபுணர் அல்ல' சட்டசபையில் முதல்வர் தகவல்
/
'நான் கிரிக்கெட் நிபுணர் அல்ல' சட்டசபையில் முதல்வர் தகவல்
'நான் கிரிக்கெட் நிபுணர் அல்ல' சட்டசபையில் முதல்வர் தகவல்
'நான் கிரிக்கெட் நிபுணர் அல்ல' சட்டசபையில் முதல்வர் தகவல்
ADDED : ஆக 23, 2025 06:31 AM
பெங்களூரு: ''நான் கிரிக்கெட் நிபுணர் அல்ல; வெறும் ரசிகன் தான்,'' என, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
ஆர்.சி.பி., கூட்ட நெரிசல் தொடர்பாக, சட்டசபையில் விதி 69ன் கீழ், நேற்று நடந்த விவாதம்:
முதல்வர் சித்தராமையா:
நான் கபடி வீரன். ஒரு போதும் கிரிக்கெட் விளையாடியதில்லை. 2005ம் ஆண்டு, சக்லேஸ்பூர் முன்னாள் எம்.எல்.ஏ., விஸ்வநாத் ஏற்பாடு செய்திருந்த எம்.எல்.ஏ., தின கொண்டாட்டத்தின்போது, முழங்காலில் காயம் ஏற்பட்டது. அந்த ஆண்டு ம.ஜ.த.,வில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, ஹூப்பள்ளியில் நடந்த மாநாட்டுக்கு கைத்தடியுடன் சென்றேன்.
பா.ஜ., - அரவிந்த் பெல்லத்:
அமைச்சர் ஜமீர் அகமது கானுக்கு கன்னடம் கற்றுத்தருகிறீர்களா?
முதல்வர்:
கன்னடம், என் தாய் மொழி. உங்களுக்கும் கன்னடம் நன்றாக தெரியும். உங்கள் தந்தை, கோகாக் இயக்கத்தில் பங்கேற்றார். இதை கேட்டு பரமேஸ்வர் சிரித்தார்.
இதை பார்த்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், 'பரமேஸ்வர் உங்களை விட மகிழ்ச்சியாக இருக்கிறார்' என்றார்.
முதல்வர்: அவர், எப்போதும் சிரிக்க வேண்டும். ஆர்.சி.பி., பிரச்னை தொடர்பாக, பரமேஸ்வர் திறமையாக பதிலளித்தார். அவரின் பலம், திறமை எனக்கு தெரியும்.
பா.ஜ., - சுனில் குமார்:
நட்பை பற்றி உள்ளேயும், வெளியேயும் கொஞ்சம் விளக்குங்கள்.
சித்தராமையா:
உங்களை தனியாக சந்திக்கும்போது விளக்குகிறேன்.
அசோக்:
சின்னசாமி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றால், துணை முதல்வர் சிவகுமார் எதற்காக சென்றார்?
துணை முதல்வர் சிவகுமார்:
அன்றைய தினம் விதான் சவுதா முன் நடந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த கே.எஸ்.சி.ஏ., தலைவர், செயலர், மைதானத்துக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக கூறினர். சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியை, 10 நிமிடத்தில் முடித்து கொள்ளுமாறு, நகர போலீஸ் கமிஷனர் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
நான், நிகழ்ச்சிக்கு சென்றதும், வீரர்களை வாழ்த்தியதும் உண்மை தான். நிகழ்ச்சியை 10 நிமிடங்களில் முடித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதும் உண்மை தான். இவ்விஷயத்தை, குன்ஹா தலைமையிலான விசாரணை குழுவிடமும் கூறி உள்ளேன். அங்கு செல்ல, எனக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. போலீசாரின் வேண்டுகோளின்படி அங்கு சென்றேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.