/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராகுலுடன் அரசியல் பேசவில்லை: சிவகுமார்
/
ராகுலுடன் அரசியல் பேசவில்லை: சிவகுமார்
ADDED : ஜன 15, 2026 07:16 AM

பெங்களூரு: 'மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுலை சந்தித்தேன். இது சாதாரண விஷயம் தான். அரசியல் குறித்து பேசவில்லை,' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
தமிழகத்தின் நீலகிரி செல்லும் வழியில், மைசூரு மண்டகள்ளி விமான நிலையத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், நேற்று முன்தினம் வந்திருந்தார். அவரை முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் வரவேற்றனர். அப்போது இருவரிடமும் ராகுல் தனித்தனியாக பேசினார். இதை மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து நேற்று சிவகுமார் அளித்த பேட்டி:
மாநில காங்கிரஸ் தலைவர் என்ற முறையில், ராகுலை சந்தித்தேன். இது சாதாரண விஷயம் தான். அரசியல் குறித்து பேசவில்லை. சில விஷயங்களை செய்ய சொன்னார். அவரின் உத்தரவுப்படி செய்வோம். மாநிலத்தில் பா.ஜ., செய்யும் அரசியல் குறித்து அவரிடம் விளக்கினேன்.
'முயற்சி தோல்வி அடைந்தாலும், கடவுள் கைவிடமாட்டார்' என்று கூறியதில் தவறு எதுவும் இல்லை.
ஒக்கலிகா தொழில்முனைவோர் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, அவர்களுக்கு எனது அனுபவத்தை எடுத்துரைக்கும் வகையில் கூறினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

