தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்: எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா நம்பிக்கை

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்: எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா நம்பிக்கை

எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்: எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா நம்பிக்கை


UPDATED : நவ 26, 2026 12:00 AM

ADDED : நவ 25, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 12:00 AM ADDED : நவ 25, 2026 10:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''நான் அமைச்சர் ஆவேன் என நம்பிக்கை உள்ளது; காங்கிரசில் இருந்து விலக மாட்டேன்,'' என, விஜயநகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., கிருஷ்ணப்பா கூறியுள்ளார்.

பெங்களூரில், நேற்று அவர் அளித்த பேட்டி:

கடந்த 2013 முதல், 2018 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில், குறுகிய காலமே நான், வீட்டு வசதி துறை அமைச்சராக பணியாற்றினேன். நிறைய ஏழைகளுக்கு வீடு வழங்கியதாக, எனது பணியை, சட்டசபையில் சித்தராமையா பாராட்டினார்.

இம்முறை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து, சித்தராமையா பதவி காலம் முடிந்து, சிவகுமார் முதல்வராக உள்ளார். எனக்கு ஏன் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என தெரியவில்லை.

இதுபற்றி, காங்கிரஸ் மேலிடத்திடம் தான், ஊடகங்கள் கேட்க வேண்டும். நான் அமைச்சர் ஆவேன் என்று, எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. சோனியா, ராகுலை நம்புகிறேன்.

அமைச்சர் பதவி விவகாரத்தில், என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருப்பதாக, ஊடகங்கள் தான் கூறுகின்றன. நான் அப்படி நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நேரம், காலம் கூடி வர வேண்டும்.

கட்சி கூறியதை நானும், என் மகன் பிரியா கிருஷ்ணாவும் கேட்டு உள்ளோம். கடந்த, 2009ல் பா.ஜ., ஆட்சியில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில், கோவிந்த்ராஜ்நகர் தொகுதியில் பிரியா கிருஷ்ணா வெற்றி பெற்றார்.

அவர் மூன்று முறையும், நான் நான்காவது முறையும் எம்.எல்.ஏ.,வாக உள்ளோம். இதை எல்லாம் மேலிடம் கருத்தில் கொள்ளும். அமைச்சர் பதவி கிடைக்காவிட்டால், காங்கிரசில் இருந்து கிருஷ்ணப்பா விலகுவதாக சிலர் தகவல் பரப்புகின்றனர்.

நான் விலக மாட்டேன். 2028 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 150 இடங்களில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us