தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துறையை விட்டு தர மாட்டேன் கிருஷ்ண பைரே கவுடா சூசகம்

 துறையை விட்டு தர மாட்டேன் கிருஷ்ண பைரே கவுடா சூசகம்

 துறையை விட்டு தர மாட்டேன் கிருஷ்ண பைரே கவுடா சூசகம்


ADDED : ஜூன் 06, 2026 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பெங்களூரு நகர வளர்ச்சி துறையை விட்டு தர மாட்டேன்,'' என, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா சூசகமாக கூறியுள்ளார்.

பெங்களூரு நகர வளர்ச்சி துறை கிடைக்காததால், மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்நிலையில், பெங்களூரு நகர வளர்ச்சி துறையின் அமை ச்சராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ண பைரே கவுடா கூறி யதாவது:

சித்தராமையா அமைச்சரவையில் வருவாய் அமைச்சராக இருந்தேன். அப்போது, நான் துவங்கிய பல பணிகளை முடிக்க வேண்டும் என்று நினைத்து, சிவகுமார் அமைச்சரவையிலும் வருவாய் துறை தான் கேட்டேன்.

ஆனால், கட்சி மேலிடம், எனக்கு பெங்களூரு நகர வளர்ச்சி துறையை கொடுத்துள்ளது. இந்த துறையை நிர்வகிப்பது எளிதான விஷயம் இல்லை.

பெங்களூரு நகரம் பல பிரச்னைகளை எதிர்கொண்டு உள்ளது. எல்லாவற்றையும் உடனே தீர்க்க முடியும் என்று உறுதியளிக்க முடியாது. ஆனாலும் எனது சக்தியை மீறி உழைக்க தயாராக உள்ளேன். மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது எனது முதல் குறிக்கோள்.

சிவகுமார் துணை முதல்வராக இருந்த போது, பெங்களூரு நகருக்கான பல திட்டங்களுக்கு அடித்தளமிட்டு உள்ளார். சுரங்கபாதை, மேம்பால பணிகளை துவக்கியுள்ளார். அந்த பணிகளை முடிப்பது எனது குறிக்கோள்.

நகரின் குப்பை பிரச்னை, போக்குவரத்து நெரிசல் உட்பட மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளை தீர்க்க கவனம் செலுத்துவேன். மக்களும் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

பெங்களூரு நமது மாநிலத்தின் பொருளாதார சக்தி. தங்க முட்டையிடும் கோழியை போன்று நகரத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும். ராமலிங்கரெட்டி ராஜினாமா குறித்து கருத்து தெரிவிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us