தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே வேட்பு மனு தாக்கல்

 ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே வேட்பு மனு தாக்கல்

 ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட மல்லிகார்ஜுன கார்கே வேட்பு மனு தாக்கல்


ADDED : ஜூன் 06, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 06, 2026 03:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ராஜ்யசபா எம்.பி., தேர்தலில் போட்டியிட, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாக இருக்கும், பா.ஜ.,வின் கே.நாராயண், ஈரண்ணா கடாதி, காங்கிரசின் மல்லிகார்ஜுன கார்கே, ம.ஜ.த.,வின் தேவகவுடா ஆகியோரின் பதவி காலம், வரும் 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

புதிய எம்.பி.,க்களை தேர்வு செய்ய, வரும் 18ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ராஜ்யசபா எம்.பி.,க்களை, எம்.எல்.ஏ.,க்கள் தான் ஓட்டு போட்டு தேர்வு செய்வர்.

காங்கிரசுக்கு இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலத்தில், மூன்று பேரை தேர்வு செய்யலாம் என்பதால், மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தேசிய ஊடக பிரிவு தலைவர் பவன் கெரா, கேரளா மாநில காங்கிரஸ் செயலர் மன்சூர் அலி கான் ஆகியோரை வேட்பாளராக அறிவித்து உள்ளனர்.

வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதியே துவங்கிய நிலையில், மல்லிகார்ஜுன கார்கே தன் வேட்பு மனுவை, விதான் சவுதா செயலர் விசாலாட்சியிடம் நேற்று தாக்கல் செய்தார்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், கர்நாடக முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us