/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசுக்கு எதிராக இந்திரா பிளக்ஸ் பேனர்கள்
/
மத்திய அரசுக்கு எதிராக இந்திரா பிளக்ஸ் பேனர்கள்
ADDED : மே 15, 2025 02:55 AM

பெங்களூரு: பெங்களூரின் பல இடங்களில் மத்திய அரசுக்கு எதிராக, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராவின் பிளக்ஸ் பேனர்களை இளைஞர் காங்கிரசார் வைத்துள்ளனர்.
பாகிஸ்தான் மீதான தாக்குதலை, மே 10ம் தேதியுடன் இந்திய ராணுவம் நிறுத்தியது. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்த நிலையில், பெங்களூரு இளைஞர் காங்கிரசார், முதல்வர் சித்தராமையா வீடு, மவுரியா சதுக்கம், காங்கிரஸ் பவன், ஆனந்தராவ் சதுக்கம், கனரா பாங்க் சுவர், டவுன் ஹால், சேஷாத்திரிபுரம் ஆகிய இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.
அதில், 'இந்தியாவுக்கு மோடியின் வார்த்தைகள் வேண்டாம்; எங்களுக்கு இந்திரா போன்ற செயல்பாடு தேவை' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளன.
பெங்களூரு நகரின் பல பகுதிகளில் மத்திய அரசுக்கு எதிராக, இளைஞர் காங்கிரஸ் சார்பில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இந்திராவின் பிளக்ஸ் பேனர்கள்.