/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்துவை சிவா தள்ளும் ஏ.ஐ., வீடியோ 'இன்ஸ்டாகிராம்' பயனர் மீது வழக்கு

ADDED : நவ 08, 2025 11:02 PM

சதாசிவநகர்: முதல்வர் சித்தராமையாவை, துணை முதல்வர் சிவகுமார் நாற்காலியில் இருந்து தள்ளிவிடுவது போன்ற போலி வீடியோவை உருவாக்கி, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றிய பயனர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம், அரசியல்வாதிகள் புகைப்படங்களை கேலி சித்திரமாக உருவாக்கி, சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது நடந்து வருகிறது. இதேபோன்று, ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையாவை, துணை முதல்வர் சிவகுமார் கோபத்தில் நாற்காலியில் இருந்து பிடித்துத் தள்ளிவிடுவது போன்றும், மீண்டும் அவரை துாக்குவது போன்றும் ஒரு வீடியோ, கன்னடா சித்ரரங்கா என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவிடப்பட்டது.
இந்த வீடியோ வைரலான நிலையில், காங்கிரசை சேர்ந்த வக்கீல் தீபு சதாசிவநகர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, இன்ஸ்டாகிராம் பயனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீடியோவை பதிவிட்டது யார் என்று விசாரிக்கின்றனர்.