/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி
/
மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி
ADDED : மே 06, 2025 05:40 AM

துமகூரு: மருத்துவமனையில் இருந்து தப்பிய விசாரணை கைதி, துமகூரில் கைது செய்யப்பட்டார்.
துமகூரின் குப்பியைச் சேர்ந்தவர் சந்திரசேகர் என்கிற சந்துரு, 32. கடந்த 2023ம் ஆண்டு பெங்களூரு, சுப்பிரமணியநகரில் ஒரு வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு, பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.
கடந்த 2ம் தேதி சந்திரசேகருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அடிக்கடி வாந்தி எடுத்தார். சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின், தீவிர சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். மறுநாள் இரவு கழிப்பறைக்கு சென்று வருவதாக, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ்காரர் சந்தோஷ் ரத்தோடிடம் கூறிவிட்டு சந்திரசேகர் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது அவர் இல்லை. மருத்துவமனை முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. அவர் தப்பிச் சென்றது தெரிந்தது.
இதுபற்றி சந்தோஷ் அளித்த புகாரில் வி.வி.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பி ஓடிய சந்திரசேகர் பற்றி துமகூரு மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
துமகூரு பஸ் நிலையத்தில் சுற்றித்திரிந்த சந்திரசேகர் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார்.