/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் 'லவ் ஜிகாத்'தா என விசாரணை
/
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் 'லவ் ஜிகாத்'தா என விசாரணை
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் 'லவ் ஜிகாத்'தா என விசாரணை
இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர் 'லவ் ஜிகாத்'தா என விசாரணை
ADDED : அக் 23, 2025 11:08 PM

ஹெச்.எஸ்.ஆர்: உல்லாசம் அனுபவித்துவிட்டு, திருமணம் செய்ய மறுத்ததுடன் இளம்பெண்ணை மதம் மாற கட்டாயப்படுத்திய வாலிபர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு, தனிசந்திராவை சேர்ந்தவர் முகமது இஷாக், 27. இவருக்கும், ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் வசிக்கும் 25 வயது இளம்பெண்ணுக்கும், கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின், இருவரும் காதலித்தனர்.
கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி, தனிசந்திராவில் உள்ள மாலில் இருவரும் சந்தித்தனர். திருமணம் செய்து கொள்வது பற்றி விவாதித்தனர்.
பின், மால் அருகே உள்ள லாட்ஜிற்கு இளம்பெண்ணை, முகமது இஷாக் அழைத்துச் சென்றார். திருமணம் செய்து கொள்வதாக கூறி, 'உறவு' வைத்துக் கொண்டார். பின், இருவரும் அவ்வப்போது சந்தித்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில், முகமது இஷாக்கிற்கு மேலும் சில பெண்களுடன் தொடர்பு இருப்பது பற்றி, இளம்பெண்ணிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தெரிந்தது. கோபம் அடைந்த அவர், காதலனுடன் சண்டை போட்டுள்ளார். தன்னை உடனே திருமணம் செய்து கொள்ளும்படி கூறி உள்ளார். முகமது இஷாக்கிடம் இருந்து சரியான பதில் இல்லை.
மனமுடைந்த இளம்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அந்த இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பேசிய, முகமது இஷாக் குடும்பத்தினர், 'அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்; போலீசில் புகார் செய்ய வேண்டாம்' என சமாதானம் பேசி உள்ளனர்.
இதையடுத்து, சில தினங்களுக்கு முன், காதலியிடம் பேசிய முகமது இஷாக், 'நீ என் மதத்திற்கு மாற வேண்டும். அப்போது தான் உன்னை திருமணம் செய்து கொள்வேன். முதலில் நீ மதம் மாறு. பின், திருமணத்தை பற்றி பேசுவோம்' என கூறி இருக்கிறார்.
மதம் மாற மறுத்தபோது, 'உன்னை திருமணம் செய்ய மாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்' எனக் கூறி, ஆபாசமாக திட்டி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீசில் இளம்பெண் புகார் அளித்தார் .
முகமது இஷாக் மீது ஹெச்.எஸ்.ஆர், லே - அவுட் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.
'லவ் ஜிகாத்' எனும் இளம்பெண்களை காதல் வலையில் வீழ்த்தி மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக, முகமது இஷாக் மீது ஒரு சமூகத்தின் அமைப்பினர் குற்றச்சாட்டு கூறி உள்ளனர்.

