/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மாதந்தோறும் ஒரு நாள் கதராடை கட்டாயமாகிறது?
/
மாதந்தோறும் ஒரு நாள் கதராடை கட்டாயமாகிறது?
ADDED : ஜன 29, 2026 06:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: முதல்வரின் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆண்டு தோறும் சுதந்திர தினம், குடியரசு தினம் உட்பட, அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்கள் கதராடை அணிவதை கட்டாயமாக்க அரசு ஆலோசிக்கிறது.
அந்த நாட்களுடன், மாதந்தோறும் முதல் வெள்ளிக் கிழமையன்று, மாநிலத்தின் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள் கதராடை அணிவது குறித்தும் அரசு ஆலோசிக்கிறது.
இது தொடர்பாக, அரசு தலைமை செயலர் தலைமையில், இன்று மதியம் 12:00 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

