sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் கிறிஸ்துவர்? சட்டசபையில் அசோக் கிளப்பினார் சந்தேகம்

/

தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் கிறிஸ்துவர்? சட்டசபையில் அசோக் கிளப்பினார் சந்தேகம்

தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் கிறிஸ்துவர்? சட்டசபையில் அசோக் கிளப்பினார் சந்தேகம்

தர்மஸ்தலா வழக்கின் புகார்தாரர் கிறிஸ்துவர்? சட்டசபையில் அசோக் கிளப்பினார் சந்தேகம்


ADDED : ஆக 14, 2025 11:17 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''தர்மஸ்தலா வழக்கில் புகார்தாரர் பெயரை வெளியிடுங்கள்,'' என்று, எதிர்க்கட்சி தலைவர் அசோக் சட்டசபையில் வலியுறுத்தினார்.

சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:

தர்மஸ்தலா வழக்கை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்பது தெளிவாக தெரிகிறது. புகார்தாரர் போலீசில் புகார் செய்தவுடன் யுடியூப்பர்கள் அவருக்கு ஆதரவாக பேசுகின்றனர். கேரள அரசு, புகார்தாரரின் பின்னால் வருகிறது. புகார்தாரரை பின்னால் இருந்து இயக்குவது யார்.

புகார்தாரருக்கு பீமா, மாஸ்க்மேன் என்று பெயர் வைத்து உள்ளனர். அந்த நபரின் உண்மையான பெயரை அரசு வெளியிட வேண்டும். அந்த நபரின் பெயர் சின்னய்யா என்றும், சாம்ராஜ்நகர் கொள்ளேகாலை சேர்ந்தவர் என்றும் வெளியில் பேசி கொள்கின்றனர்.

அந்த நபர் ஹிந்துவில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் என்றும் பேசுகின்றனர்.

தினமும் பிரியாணி ஸ்பைடர் மேன் தோற்றத்தில் அந்த நபர் காட்சி அளிக்கிறார். அவரது முகமூடியை முதலில் அகற்ற வேண்டும். எதிர்க்கட்சி தலைவரான எனக்கும், அமைச்சர்களுக்கும் கிடைக்காத பாதுகாப்பு அந்த நபருக்கு கிடைக்கிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கின்றனர். அந்த நபர் தினமும் பிரியாணி சாப்பிட்டு மகிழ்ச்சியாக உள்ளார்.

தர்மஸ்தலாவில் பள்ளம் தோண்டும் பணிக்காக, 1 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து உள்ளனர். மக்களின் வரிப்பணத்தை அரசு வீணடிக்கிறது. இறந்தவர்கள் உடல்களை பல கி.மீ., துாரம் சுமந்து செல்ல, புகார்தாரர் என்ன சூப்பர்மேனா. வனப்பகுதியில் அவரை எந்த விலங்கும் தாக்கவில்லையா.

அந்த நபரை கடைசியில் பைத்தியம் என்று சொல்வதற்கு பதிலாக, முதலிலேயே அவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு இருக்க வேண்டும். அந்த நபர் கூறும் இடங்களில் எல்லாம் பள்ளம் தோண்டும், எஸ்.ஐ.டி., அதிகாரிகளுக்கு கொஞ்சமாவது பொது அறிவு இல்லையா. பிரணவ் மொஹந்தி நல்ல அதிகாரி தான். அவரை நான் குறை சொல்லவில்லை.

20 அடி ஆழம் எஸ்.ஐ.டி., அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடவில்லை. சித்தராமையா சுற்றி உள்ள கும்பலின் அழுத்தத்தால், எஸ்.ஐ.டி., அமைக்கப்பட்டது. புலியை பிடிக்க போவதாக கூறிவிட்டு எலியை பிடித்த கதையாகி விட்டது. ஆனால் எலி கூட கிடைக்கவில்லை. ஒரு மனிதனால் 20 அடி ஆழத்திற்கு தனியாக குழி தோண்ட முடியுமா. அவரது பின்னணியை முதலில் சரிபார்த்து இருக்க வேண்டும்.

அந்த நபருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்து உள்ளதாக சிலர் பேசுகின்றனர். இதுபற்றி விசாரிக்க சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். அந்த நபரை மருத்துவமனையில் சேர்த்தால், மருத்துவமனை கட்டிய இடத்தில் கூட உடல்களை புதைத்தாக சொன்னாலும் சொல்வார். தர்மஸ்தலாவில் நடந்ததாக கூறப்படும் கொலைகள் பற்றி எஸ்.ஐ.டி., விசாரிக்கட்டும். இதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

மகள் இல்லை தர்மஸ்தலாவில் கொலை செய்யப்பட்ட சவுஜன்யா வழக்கில், நீதி கிடைப்பதற்கு நாங்களும் உறுதியாக இருப்போம். ஆனால் சவுஜன்யா வழக்கை வைத்து, தர்மஸ்தலா கோவிலை அவமதிப்பதை பொறுக்க முடியாது. சபரிமலை, திருப்பதி, சனி சிங்னாபூர் கோவில்கள் மீது அவதுாறு பரப்பினர். அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இப்போது தர்மஸ்தலா பக்கம் திரும்பி உள்ளனர்.

ஹிந்துக்களின் புனித தலங்கள் மீது அவதுாறு பரப்பி அழித்து விடலாம் என நினைக்கின்றனர். சுஜாதா பட் என்பவர், தர்மஸ்தலா சென்ற மகள் அனன்யாவை பட்டை காணவில்லை என்று 20 ஆண்டுக்கு பின், புகார் செய்து உள்ளார். ஆனால் கன்னட செய்தி சேனல் நடத்திய உண்மை கண்டறியும் தொகுப்பில், அனன்யா பட் மருத்துவ மாணவி இல்லை என்பதும், சுஜாதா பட்டின் மகள் இல்லை என்றும் தெரியவந்து உள்ளது. அரசு கொஞ்சமாவது யோசித்து இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us