/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மனைவியுடன் தகராறு; ஐ.டி., ஊழியர் தற்கொலை
/
மனைவியுடன் தகராறு; ஐ.டி., ஊழியர் தற்கொலை
ADDED : ஏப் 07, 2025 10:18 PM

சோழதேவனஹள்ளி; கேரள மாநிலம், ஆலப்புழாவைச் சேர்ந்தவர் பிரசாந்த் நாயர். 40. இவரது மனைவி பூஜா, 37. தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் உள்ளார்.
பிரசாந்த் ஐ.டி.,யிலும், பூஜா தனியார் நிறுவனத்திலும் வேலை செய்தனர். சிக்கபானவாராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தனர்.
சில மாதங்களாக கணவன், மனைவி இடையில் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கணவரை விவாகரத்து செய்ய மனைவி முடிவு செய்தார். இதனால் பிரசாந்த் மனம் உடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு பிரசாந்தின் மொபைல் போனுக்கு அவரது தந்தை பல முறை அழைத்தார். போன் எடுக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவர், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு போன் செய்து கூறினார்.
அவர்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, பிரசாந்த் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரிந்தது. சோழதேவனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.