/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டி தகுதி நீக்கம் காலியானது கங்காவதி தொகுதி
/
ஜனார்த்தன ரெட்டி தகுதி நீக்கம் காலியானது கங்காவதி தொகுதி
ஜனார்த்தன ரெட்டி தகுதி நீக்கம் காலியானது கங்காவதி தொகுதி
ஜனார்த்தன ரெட்டி தகுதி நீக்கம் காலியானது கங்காவதி தொகுதி
ADDED : மே 09, 2025 12:37 AM

பெங்களூரு: ஆந்திராவின் ஓபலாபுரம் கனிம சுரங்க முறைகேடு வழக்கில், கர்நாடகாவின் கொப்பால் கங்காவதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி, 63, உள்ளிட்ட சிலருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஹைதராபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் கடந்த 6ம் தேதி தீர்ப்பு கூறியது.
இதையடுத்து அவர் சஞ்சலகுடாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பொதுவாக மக்கள் பிரதிநிதிகள் ஒரு வழக்கில், இரண்டு ஆண்டுக்கு மேல் சிறை தண்டனை பெற்றால், அவர்களது பதவி தானாக பறிபோய் விடும்.
ஜனார்த்தன ரெட்டிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதன்படி நேற்று மாலை கர்நாடக சட்டசபை செயலகம் வெளியிட்ட அறிக்கையில், எம்.எல்.ஏ., பதவியில் இருந்து ஜனார்த்தன ரெட்டி தகுதி நீக்கம் செய்யப்படுவதாகவும்; கங்காவதி தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.