/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்
/
ஆக., 18ல் சுத்துார் மடத்தில் கூட்டு திருமணம்
ADDED : ஆக 04, 2025 05:22 AM
மைசூரு: சுத்துார் மடம் சார்பில் வரும் 18 ல் கூட்டு திருமணம் நடக்க உள்ளதால், இதில் திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், விண்ணப்பிக்கலாம் என அறிவித்து உள்ளது.
அறிக்கையில், 'மைசூரு நஞ்சன்கூடில் உள்ள சுத்துார் மடத்தில் வரும் 18 ம் தேதி கூட்டு திருமணம் நடக்கிறது. பெண்ணுக்கு 18 வயதும், ஆணுக்கு 23 வயதும் பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
விருப்பம் உள்ளவர்கள், திருமணம் நடப்பதற்கு 8 நாட்களுக்கு முன், ஜே.எஸ்.எஸ்., கல்வி மையத்தில் உள்ள அதிகாரியிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 082221 - 232217 / 232033 அல்லது 97413 42222 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.