ADDED : ஜூலை 26, 2026 11:57 PM

அ நிறம் | அளவு
சர்ஜாபூர்: மேகதாதுவில் அணை கட்ட கோரி, அத்திப்பள்ளியில் கன்னட அமைப்பினர், காலி குடங்களுடன் போராட்டம் நடத்தினர்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட கோரி, பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளியில், கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் நேற்று காலை போராட்டம் நடத்தினர். அத்திப்பள்ளி சதுக்கத்தில் இருந்து, கர்நாடகா - தமிழக எல்லை வரை, காலி குடங்களுடன் பேரணியாக சென்றனர்.
சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். போராட்டத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
