/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கன்னட 'யு டியூபர்' சர்ச்சை; ரூ.10 கோடி கேட்டு வழக்கு
/
கன்னட 'யு டியூபர்' சர்ச்சை; ரூ.10 கோடி கேட்டு வழக்கு
கன்னட 'யு டியூபர்' சர்ச்சை; ரூ.10 கோடி கேட்டு வழக்கு
கன்னட 'யு டியூபர்' சர்ச்சை; ரூ.10 கோடி கேட்டு வழக்கு
ADDED : ஏப் 14, 2025 05:44 AM
பெங்களூரு : பாலியல் வழக்கு குறித்து வீடியோ வெளியிட்ட யு டியூபரிடம் 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு அவதுாறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
தட்சிண கன்னடா, தர்மஸ்தலாவில் கடந்த 2012ம் ஆண்டு கல்லுாரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலையானார். இந்த வழக்கு, தற்போது வரை பேசப்படுகிறது.
இது குறித்து கன்னட யு டியூபர் எம்.டி.சமீர், கடந்த பிப்ரவரி 25ம் தேதி, ஒரு வீடியோவை யு டியூபில் வெளியிட்டார். இந்த வீடியோவில், மாணவி கொலையில், தர்மஸ்தலா கோவில் பிரதிநிதிகளுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தார். இந்த வீடியோ, 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பரவியது. சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறியது.
இந்நிலையில், யு டியூபர் சமீருக்கு எதிராக, கடந்த மாதம் பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில், கோவில் நிர்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில், இந்த விவகாரம் குறித்து, சமீர் மீண்டும் வீடியோக்கள் வெளியிட கூடாது. ஏற்கனவே பதிவேற்றம் செய்த வீடியோவை நீக்கம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி, மாணவி கொலை குறித்த அடுத்த வீடியோவை சமீபத்தில் சமீர் வெளியிட்டார். இது குறித்து, ஸ்ரீ தர்மஸ்தலா கோவில் பிரதிநிதிகள் சார்பில், சமீருக்கு எதிராக பெங்களூரு 4வது கூடுதல் நகர சிவில் அமர்வு நீதிமன்றத்தில், சமீர் 10 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நடராஜ், 'சர்ச்சைக்குரிய வீடியோவை உடனடியாக நீக்க வேண்டும். சமீர் நேரில் ஆஜராக வேண்டும். அடுத்த விசாரணை ஜூன் 9ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என்றார்.

