தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு கர்நாடகா உதவி எண்கள் அறிவிப்பு

 வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு கர்நாடகா உதவி எண்கள் அறிவிப்பு

 வெள்ள பாதிப்பில் சிக்கியவர்களுக்கு கர்நாடகா உதவி எண்கள் அறிவிப்பு


ADDED : ஆக 28, 2026 02:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 02:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: நேபாள நாட்டில் வெள்ள அபாயத்தில், கர்நாடாவை சேர்ந்த எட்டு பேர் சிக்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது. உயிரிழப்பு ஏதும் நடந்ததாக, தகவல் வரவில்லை, என, துணை முதல்வர் பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரின், விதான் சவுதாவில் அவர் அளித்த பேட்டி:

நேபாள நாட்டில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இங்கு அபாயத்தில் சிக்கியவர்களுக்காக, கட்டணம் இல்லாத போன் எண்ணை கொடுத்துள்ளோம். இது அங்குள்ள கன்னடர்களுக்கு உதவியாக இருக்கும். நேபாளில் வெள்ள அபாயத்தில் சிக்கியவர்கள், உதவி எண் 1070 - 08022253707ல் தொடர்பு கொண்டால், உடனடி உதவி கிடைக்கும். கர்நாடகாவின் உயர் அதிகாரி ஒருவரை, காத்மாண்டுக்கு அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.

அவசியம் ஏற்பட்டால், முதல்வருடன் பேசி அமைச்சர்களை அனுப்புவோம். சீனாவின் துாதரக அலுவலகம், திபெத் பகுதி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறோம். அங்கு சிக்கிய மக்களை மீட்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவசர உதவி எண்கள்:  977 985 131 6807

 977 970 910 7500

 977 981 032 6117

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us