/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எதிராக எந்த ஆதாரமும் இல்லை; சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சான்று
/
எதிராக எந்த ஆதாரமும் இல்லை; சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சான்று
எதிராக எந்த ஆதாரமும் இல்லை; சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சான்று
எதிராக எந்த ஆதாரமும் இல்லை; சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா சான்று
ADDED : பிப் 19, 2025 06:32 PM

பெங்களூரு: மூடா வழக்கில் கர்நாடகா முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது.
தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 'முடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டுமனைகளை வாங்கிக் கொடுத்ததாக, முதல்வர் சித்தராமையா மீது சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா குற்றச்சாட்டு கூறினார். இந்த புகார் குறித்து முதல்வரிடம் விசாரிக்க அனுமதி வழங்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் அவர் மனு கொடுத்தார். அத்துடன் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிடும்படியும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்தார்.
இதற்கிடையில் முதல்வரிடம் விசாரணை நடத்த கவர்னரிடம் இருந்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திடம் இருந்தும் அனுமதி கிடைத்தது. இதையடுத்து வழக்கின் முதல் குற்றவாளியாக சித்தராமையா பெயரை மைசூரு லோக் ஆயுக்தா சேர்த்தது. கவர்னர் அனுமதிக்கு எதிராக சித்தராமையா தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, கவர்னர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறி இருந்தது. மேலும், சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை என்றும், லோக் ஆயுக்தா அமைப்பே தொடர்ந்து விசாரிக்கும் என்றும் கூறப்பட்டது. இதன்பிறகு, முதல்வருக்கு எதிரான மூடா வழக்கை லோக் ஆயுக்தா விசாரித்து வந்தது.
இந்த நிலையில், மூடா வழக்கில் முறைகேட்டில் ஈடுபட்டதாக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது. மேலும், புகார்தாரரான சிநேகமயி கிருஷ்ணா பதிலளிக்க ஒருவாரம் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு, ஹைகோர்ட்டில் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக லோக் ஆயுக்தா தெரிவித்துள்ளது.

